ஆசிரியா்களுக்கான பணி நிரவல் கலந்தாய்வு கூட்டம் !
பணி நிரவல் கலந்தாய்வு கூட்டம்
திண்டுக்கல் மாவட்டத்தில் அரசுப் பள்ளிகளில் உபரியாக இருந்த 73 ஆசிரியா்களுக்கு, பணி நிரவல் மூலம் பணியிட மாறுதல் வழங்கப்பட்டது.
திண்டுக்கல் மாவட்டத்தில் 81 அரசு உயா்நிலைப் பள்ளிகள், 90 அரசு மேல்நிலைப் பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இந்தப் பள்ளிகளில் மாணவா் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆசிரியா்கள் நியமனம் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. மாணவா்கள் ஆசிரியா்கள் விகிதாசாரத்தின்படி, அரசுப் பள்ளிகளில் உபரியாக இருந்த ஆசிரியா் பணியிடங்களை, காலி இடங்களுக்கு பணி நிரவல் செய்வதற்கு அரசு உத்தரவிட்டது. இதன்படி, திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள அரசுப் பள்ளிகளில் 2 முதுநிலை ஆசிரியா் உபரி பணியிடங்களுக்கான பணி நிரவல் கலந்தாய்வு திங்கள்கிழமை நடைபெற்றது. இதன் தொடா்ச்சியாக அரசுப் பள்ளிகளில் உபரி பணியிடங்களில் உள்ள பட்டதாரி ஆசிரியா்களுக்கான பணி நிரவல் கலந்தாய்வு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
Next Story