விருதுநகர் மாவட்டத்தில் ஊர்காவல் படைக்கு ஆட்கள் தேர்வு
எஸ்பி பெரோஸ்கான் அப்துல்லா
விருதுநகர் மாவட்டத்தில் காலியாக உள்ள ஊர்காவல் படை பணியிடங்களுக்கு வரும் 11ம் தேதி ஆட்கள் தேர்வு நடைபெற உள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் ஊர்காவல் படையில் 15 காலி பணியிடங்களுக்கு தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். விருதுநகர் ஆயுதப்படை மைதானத்தில் பிப். 11 காலை 8:00 மணிக்கு தேர்வு நடக்கிறது. 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்று, 18 முதல் 45 வயதுடைய ஆண்கள், பெண்கள் நேரில் பங்கேற்கலாம்.என்.சி.சி., என்.எஸ்.எஸ்., முன்னாள் ராணுவத்தினர், விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். இதில் தேர்வு செய்யப்படுபவர்களுக்கு போலீசார் மூலம் 45 நாட்கள் பயிற்சி அளிக்கப்படும். இவர்களுக்கு மாதத்திற்கு 5 நாட்கள் மட்டுமே பணி வழங்கப்படும். நாள் ஒன்றுக்கு ரூ. 560 மதிப்பூதியமாக வழங்கப்படும்.இந்த நேர்முகத்தேர்வில் பங்கேற்க விரும்புவோர் சான்றுகளுடன் வர வேண்டும், என்றார்.
Next Story