அக்னிபாத் திட்டத்தில் ஆட்சேர்ப்பு - 11 மாவட்ட இளைஞர்களுக்கு அழைப்பு

அக்னிபாத் திட்டத்தில் ஆட்சேர்ப்பு - 11 மாவட்ட இளைஞர்களுக்கு அழைப்பு

அக்னிபாத் திட்டத்தில் ஆட்சேர்ப்பு - 11 மாவட்ட இளைஞர்களுக்கு அழைப்பு - -நாமக்கல் மாவட்ட ஆட்சியர் தகவல்

அக்னிபாத் திட்டத்தில் ஆட்சேர்ப்பு - 11 மாவட்ட இளைஞர்களுக்கு அழைப்பு - -நாமக்கல் மாவட்ட ஆட்சியர் தகவல்
அக்னிபாத் திட்டத்தின் கீழ், ராணுவத்தில் சேர, இணையதளம் மூலம் விண்ணப்பிக்க, 11 மாவட்ட இளைஞர்களுக்கு, கோவை ராணுவ ஆட்சேர்ப்பு அலுவலகம் அழைப்பு விடுத்துள்ளது. இது தொடர்பாக நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது.. அக்னிபாத் திட்டத்தின் கீழ், 2024 - 25-ம் ஆண்டுக்கான, ராணுவத்திற்கு அக்னி வீர் சேர்க்கைக்கான தேர்வு நடக்கவுள்ளது. இதில், கோவை, திருப்பூர், சேலம், ஈரோடு, நாமக்கல், கிருஷ்ணகிரி, தருமபுரி, நீலகிரி, திண்டுக்கல், மதுரை, தேனி ஆகிய 11 மாவட்டங்களைச் சேர்ந்த திருமணம் ஆகாத ஆண்கள் விண்ணப்பிக்கலாம். விருப்ப முள்ளவர்கள், www.joinindianarmy.nic.in என்ற இணையதளம் மூலமாக வரும் மார்ச் 22-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். அக்னி வீரர்கள் தேர்வானது, ஆன்லைனில் கணினி வழியிலான எழுத்துத் தேர்வு மற்றும் ஆட் சேர்ப்பு என இரு கட்டங்களாக நடைபெறும். ஆன்லைன் தேர்வுகள் வரும் ஏப்ரல் 22-ம் தேதி முதல் தொடங்கும். இந்திய ராணுவத்தின் தேர்வு மற்றும் ஆட்தேர்வுக்கு எந்த நிலையிலும், யாருக்கும் லஞ்சம் கொடுக்கப்பட மாட்டாது. ஆட்சேர்ப்பு முகவர்களை நம்ப வேண்டாம் என மாவட்ட ஆட்சியர் செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story