சட்ட தன்னார்வத் தொண்டர்கள் சேர்க்கை

சட்ட தன்னார்வத் தொண்டர்கள் சேர்க்கை

சட்ட தன்னார்வத் தொண்டர்கள் சேர்க்கை

பெரம்பலூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் அதன் கீழ் இயங்கும் வட்ட சட்டப்பணிகள் குழுவிற்கு சட்டத் தன்னார்வத் தொண்டர்கள் சேர்க்கை நடைபெற உள்ளது.

பெரம்பலூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் அதன் கீழ் இயங்கும் வட்ட சட்ட பணிக்குழுவிற்கு தன்னார்வலர்கள்" தேர்வு செய்வதற்கு பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் மட்டும் கீழ்கண்ட பிரிவினர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றது.

இதில் ஆசிரியர்கள், ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் மற்றும் ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் மற்றும் மூத்த குடிமக்கள். M.S.W பயிலும் மாணவர்கள் மற்றும் பயிற்றுவிக்கும் ஆசிரியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், மருத்துவர்கள், மாணவர்கள் மற்றும் சட்டக் கல்லூரி மாணவர்கள், சமூக சேவை புரியும் சமூக ஆர்வலர்கள் அரசியல் அமைப்பு சாராத தன்னார்வ தொண்டு நிறுவனங்களை சார்ந்தவர்கள், மகளிர் சுய உதவிக்குழுக்கள் மற்றும் சமூக தொண்டு புரியும் மகளிர் குழுக்கள். நீண்ட கால தண்டனை பெற்ற படித்த நல்ல குணம் உள்ள சிறைவாசிகள்.ஆகியோர் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்ப படிவங்களை . www.districts.ecourts.gov.in/perambalur என்ற இணைய வழியில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவங்கள் 'தலைவர், முதன்மை மாவட்ட நீதிபதி, மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு, ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம், பெரம்பலூர்' என்ற முகவரியில் நேரிலோ அல்லது தபால் மூலமோ மே-17ம் தேதி மாலை 5:30 மணிக்குள் சமர்ப்பிக்கப்பட வேண்டும்.முக்கிய குறிப்பு இப்பணிக்கு சம்பளம், தொகுப்பூதியம் மற்றும் தினக்கூலி ஏதும் கிடையாது.

சேவை மணப்பாண்மை உள்ளவராக இருத்தல் வேண்டும். என பெரம்பலூர் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு, தலைவரும், முதன்மை மாவட்ட நீதிபதியுமான பல்கீஸ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Tags

Read MoreRead Less
Next Story