மத்திய கூட்டுறவு வங்கியில் புதிய உறுப்பினர்கள் சேர்ப்பு
கடன் மேளா
திருவண்ணாமலை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மூலம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் புதிய உறுப்பினர்கள் சேர்த்தல் மற்றும் கடன் மேளா விழா நடைபெற்றது . இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு செய்யாறு சட்டமன்ற உறுப்பினர் ஒ.ஜோதி ரூபாய் 10 கோடியே 62 லட்சத்தி 23 ஆயிரத்து 880 ரூபாய் மதிப்பீட்டில் 1861 பயனாளிகளுக்கு கடன் உதவிக்கான காசோலையை வழங்கி சிறப்புரை ஆற்றினார்.
உடன் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பார்வதி சீனிவாசன் முன்னாள் நகர மன்ற தலைவர் சம்பத் நகர மன்ற உறுப்பினர்கள் சரஸ்வதி ரவிக்குமார், கல்பனா விஜயபாஸ்கர், கோவேந்தன், ஞானமணி சின்னதுரை, அகமத், ராஜலட்சுமி அண்ணாதுரை, சௌந்தர பாண்டியன், செந்தில்குமார், கார்த்திகேயன் நகர இளைஞரணி அமைப்பாளர் துரைசாமி மற்றும் அரசு அதிகாரிகள் கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.