இந்திய விமானப் படையின் அக்னிவீர் வாயு விமானப்படை திட்டத்தின் கீழ் ஆட்சேர்ப்பு
மாவட்ட ஆட்சியர்
இந்திய விமானப் படையின் அக்னிவீர் வாயு விமானப்படை திட்டத்தின் கீழ் ஆட்சேர்ப்பு தேர்விற்கான பதிவு இணையவழியில் நடைப்பெறவுள்ளதால் அதனை வேலூர் மாவட்டத்தில் உள்ள இளைஞர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சித் தலைவர் பாண்டியன் தெரிவித்துள்ளார் இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்திய விமானப் படையின் அக்னிவீர் வாயு விமானப்படை திட்டத்தின் கீழ் ஆட்சேர்ப்பு தேர்விற்கான பதிவு இணையவழியில் நடைப்பெறவுள்ளதால் விண்ணப்பிக்க கடைசி தேதி 06.02.2024 ஆகும், அக்னிவீர்வாயு தேர்வுக்கு 02.01.2004 முதல் 02.07.2007 வரை பிறந்த திருமணமாகாத இந்திய ஆண் மற்றும் பெண் விண்ணப்பதாரர்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள் ஆவார்.
இத்தேர்வுக்கு 12 ஆம் வகுப்பில் கணிதம், இயற்பியல் மற்றும் ஆங்கிலம் ஆகிய பாடங்களில் குறைந்தபட்சம் 50% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட பாலிடெக்னிக் நிறுவனத்தில் பொறியியல் (மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக், ஆட்டோமொபைல், கம்ப்யூட்டர் சயின்ஸ், இன்ஸ்ட்ரூமென்டேஷன் டெக்னாலஜி மற்றும் இன்பர்மேஷன் டெக்னாலஜி) மூன்றாண்டு டிப்ளமோ படிப்புகளில் மொத்தம் 50% மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஆர்வமுள்ள இளைஞர்கள் https://agnipathvayu.cdac.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.
மேலும், வேலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் அலுவலக வேலை நாட்களில் நேரில் அணுகி அறிந்து கொள்ளலாம் அல்லது தொலைபேசி எண் 0416 2290042 வாயிலாகவும் தொடர்பு கொள்ளலாம். வேலூர் மாவட்டத்தைச் சார்ந்த தகுதி வாய்ந்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் அக்னிவீர் வாயு விமானப்படை தேர்வில் பங்கு பெற்று பயனடையுமாறு வ மாவட்ட ஆட்சித் தலைவர் குமாரவேல் பாண்டியன் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.