ரெட் அலர்ட்... ஆலோசனை நடத்திய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
ரெட் அலர்ட் தொடர்பாக ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளருடன் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.
ரெட் அலர்ட் தொடர்பாக ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளருடன் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.
தென்மாவட்டங்களான நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரியில் தொடர்ந்து அதி கனமழை பெய்து வருகிறது. வரலாறு காணாத மழையால் இந்த 4 மாவட்டங்களில் பெரும்பாலான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அங்கு நேரில் சென்று வெள்ள பாதிப்புகள் குறித்து ஆய்வு நடத்த சென்ற தமிழக விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின். திருநெல்வேலி செல்லும் வழியில் விருதுநகர் பொதுப்பணித்துறை ஆய்வு மாளிகையில் விருதுநகர் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சீனிவாச பெருமாள் ஆகியோரை நேரில் சந்தித்து , விருதுநகர் மாவட்டத்திற்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள தொடர்பாகவும் எந்த இடத்தில் மழை பாதிப்பு அதிகமாக இருக்கிறது என்பது குறித்து கலந்து ஆலோசித்து ஆய்வு மேற்கொண்டார்.
Next Story