காட்பாடியில் ரெட்கிராஸ் சங்க மேலாண்மைக்குழு கூட்டம்

காட்பாடியில் ரெட்கிராஸ் சங்க மேலாண்மைக்குழு கூட்டம்

காலண்டர் வெளியிட்ட உறுப்பினர்கள்

காட்பாடியில் ரெட்கிராஸ் சங்கத்தின் மேலாண்மைக்குழு கூட்டம் நடைபெற்றது.

காட்பாடியில் ரெட்கிராஸ் சங்கத்தின் மேலாண்மைக்குழு கூட்டம். வேலூர் மாவட்டம் காட்பாடி ரெட்கிராஸ் சங்கத்தின் மேலாண்மைக்குழு கூட்டத்தில் மாதாந்திர நாட்காட்டியினை கோட்டாட்சியர் ஆர்.கே.கவிதா மாவட்ட வருவாய் அலுவலர் மாலதி ஆகியோர் வெளியிட்டார்கள்.

வேலூர் மாவட்டம் காட்பாடி வட்ட இந்தியன் ரெட்கிராஸ் சங்கத்தின் மேலாண்மைக்குழு கூட்டம் மற்றும் சங்கத்தின் 2024ஆம் ஆண்டிற்கான மாதாந்திர நாள்காட்டி வெளியீட்டு விழா சங்கத்தின் தலைவரும் வேலூர் வருவாய் கோட்டாட்சியர் கவிதா தலைமையில் நடைபெற்றது.

முன்னதாக அவைத்தலைவர் ஜனார்த்தனன் வரவேற்று பேசினார். பின்னர் 2024ஆம் ஆண்டிற்கான சங்கத்தின் மாதாந்திர நாட்காட்டியினை வேலூர் உதவி ஆட்சியர் கவிதா வெளியிட அவைத்தலைவர் ஜனார்த்தனன் பெற்றுக்கொண்டார்.

பின்னர் கூட்டத்தில், 2024ஆம் ஆண்டிற்கான வருடாந்திர செயல்பாடுகளை வடிவமைத்து சிறப்பாக செயல்படுத்துவது. பொங்கல்விழா சிறப்பாக நடத்துவது என்றும் இவ்விழாவில் கடந்த ஆண்டில் சிறப்பாக செயல்பட்டவர்களுக்கு பாராட்டுவது என்றும் தீர்மானிக்கப்பட்டது.

Tags

Next Story