அமைச்சர் பொன்முடி மீதான செம்மண் குவாரி வழக்கு இன்று விசாரணை

அமைச்சர் பொன்முடி மீதான செம்மண் குவாரி வழக்கு இன்று விசாரணை

அமைச்சர் பொன்முடி 

வானூர் அருகே அதிக அளவில் செம்மண் எடுத்து அரசுக்கு இழப்பு ஏற்படுத்தியதாக அமைச்சர் பொன்முடி மீது தொடரப்பட்ட வழக்கில் இன்று விசாரணை நடக்கிறது.

விழுப்புரம் மாவட்டம், வானுார் தாலுகா பூத்துறை கிராமத்தில் உள்ள குவாரியில் அளவுக்கு அதிகமாக செம்மண் எடுத்து, அரசுக்கு ரூ.28 கோடி இழப்பு ஏற்படுத்தியதாக அமைச்சர் பொன்முடி உள்ளிட்ட 8 பேர் மீது மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் தொடர்ந்த வழக்கு, மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இவ்வழக்கில் மொத்தமுள்ள 67 சாட்சிகளில், இதுவரை 31 சாட்சிகள் விசாரிக்கப்பட்டுள்ளது. அவர்களில் 24 பேர் பிறழ் சாட்சியம் அளித்துள்ளனர்.

நேற்று இவ்வழக்கு விசாரணையில் 32வது சாட்சியாக நன்னாடு கிராம உதவியாளர் சேகர் ஆஜராகி சாட்சியம் அளித்தார். அப்போது அவர், இந்த வழக்கு குறித்து, அப்போதைய உயர் அதிகாரிகள் வற்புறுத்தியதன்பேரில், கோப்புகளில் கையெழுத்திட்டேன், எனக்கு எதுவும் தெரியாது என பிறழ் சாட்சியம் அளித்தார். அதனை பதிவு செய்த நீதிபதி பூர்ணிமா, வழக்கின் விசாரணையை இன்று 11ம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.

Tags

Read MoreRead Less
Next Story