பேச்சிப்பாறை அணையிலிருந்து நீர் திறப்பு குறைப்பு 

பேச்சிப்பாறை அணையிலிருந்து நீர் திறப்பு குறைப்பு 

பேச்சிப்பாறை அணையிலிருந்து நீர் திறப்பு 535 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது.


பேச்சிப்பாறை அணையிலிருந்து நீர் திறப்பு 535 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த வாரம் தொடர்ச்சியாக மழை பெய்து வந்தது. இந்த மழையால் அணைகளுக்கான நீர் வரத்தும் உயர்ந்தது. ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த நிலையில் கேரளாவிலும் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், குமரி மாவட்டத்தில் மழை இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் கன்னி பூ சாகுபடிக்காக பேச்சிப்பாறை அணை நீர் நேற்று திறக்கப்பட்டது. கலெக்டர் ஸ்ரீதர் அணையை திறந்து வைத்தார்.

முதலாவதாக 850 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டது. இந்த நிலையில் நேற்றும் இன்றும் மாவட்டத்தில் எங்கும் மழை இல்லை. தொடர்ந்து காற்று வீசி வகிறது. இந்த நிலையில் நேற்று 45. 45 அடியாக பேச்சுப் பாறை அணை நீர் இருந்தது. இன்று காலை நிலவரப்படி அணைக்கு வினாடிக்கு 400 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது.

இந்த நிலையில் அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு 850 கண்ணாடியில் இருந்து இன்று 535 கன அடி ஆனது. பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 61.25 அடியாக உள்ளது. அணை திறக்கப்பட்டுள்ளதால் கோதையாறு மற்றும் பட்டணம்கால் பாசன கால்வாய்கள் மூலம் 79 ஆயிரம் ஏக்கர் பாசன நிலங்கள் பயன்படும் .

Tags

Next Story