சைபர் கிரைம் போலீஸ் நடத்தும் ரீல் போட்டி !
சைபர் கிரைம் போலீஸ் நடத்தும் மோசடி விழிப்புணர்வு ரீல் போட்டி நடைபெருவதால் கூகுள் ஃபார்ம் மூலம் ஆன்லைனில் பதிவு செய்யலாம் என தெரிவித்துள்ளனர்.
குமரி மாவட்ட காவல் துறை சார்பில் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு :- தமிழ்நாடு காவல்துறை சைபர் குற்றப்பிரிவு சார்பில் மாணவ மாணவிகள், இளைஞர்கள், இளம் பெண்களின் படைப்பாற்றல் திறனை வெளிப்படுத்தும் வகையில ரீல் போட்டி நடத்தப்பட உள்ளது. வழக்கமாக கதை சொல்லல் மற்றும் காட்சி வெளிப்பாட்டின் எல்லைகளை தாண்டி பங்கேற்பாளர்கள் புதுவிதமான படைப்பாற்றலை வலுப்படுத்த ஊக்குவிக்கப்படும் விதமாக இந்த போட்டி நடத்தப்பட உள்ளது. பங்கேற்பாளர்கள் வரும் 14. 3. 2024 வரை கூகுள் ஃபார்ம் மூலம் ஆன்லைனில் பதிவு செய்யலாம். அனைத்து தரப்பினரும் இதில் பங்கேற்கலாம். பங்கேற்பாளர்கள் தங்களின் ரீல்கள் 30 வினாடிக்குள் கருப்பொருளுக்கு ஏற்றவாறு இருக்கும் வகையில் பார்த்துக்கொள்ள வேண்டும். ரீல்களை கூகுள் டிரைவில் பதிவேற்றம் செய்து, அதற்கான லிங்கை 14. 3. 2024க்குள் கூகுள் ஃபாமில் பகிர வேண்டும். ஆன்லைன் கடன் செயலி மோசடி, ஆன்லைன் திருமணம் மோசடி, கூரியர் மோசடி, சமூக ஊடங்களில் சுயம்வரம், ஆள்மாறாட்டம் மோசடி, ஆன்லைன் பகுதி நேர வேலை மோசடி ஆகிய தலைப்புகளை மையப்படுத்தி ரீல் அமைக்கப்பட்டு இருக்க வேண்டும். இதற்கு முதல் பரிசு ரூ.25 ஆயிரம், இரண்டாம் பரிசு ரூ. 20 ஆயிரம், மூன்றாம் பரிசு ரூ. 15 ஆயிரம் ஆகும். மார்ச் 18ஆம் தேதி நடைபெறும் விழாவில் வெற்றியாளர்கள் அறிவிக்கப்படுவார்கள் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story