வாகன ஓட்டுனர்களுக்கு புத்தாக்கப் பயிற்சி

வாகன ஓட்டுனர்களுக்கு புத்தாக்கப் பயிற்சி

 சங்ககிரி வட்டாரப் போக்குவரத்து துறை சார்பில் வாகன ஓட்டுனர்களுக்கு புத்தாக்கப் பயிற்சி அளிக்கப்பட்டது.

சங்ககிரி வட்டாரப் போக்குவரத்து துறை சார்பில் வாகன ஓட்டுனர்களுக்கு புத்தாக்கப் பயிற்சி அளிக்கப்பட்டது.

முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி நூற்றாண்டு விழாவினையொட்டி சேலம் மாவட்டம், சங்ககிரி வட்டார போக்குவரத்து துறையின் சார்பில் வாகன ஓட்டுநர்களுக்கு மன அழுத்தத்தை போக்கும் புத்தாக பயிற்சி வீராச்சிபாளையத்தில் உள்ள விவேகானந்தா கல்வி நிறுவனங்களின் வளாகத்தில் சேல சரக துணை போக்குவரத்து ஆணையாளர் கே.எம்.பிரபாகரன் தலைமையில் நடைபெற்றது. சங்ககிரி வட்டார போக்குவரத்து அலுவலர் சுப்ரமணியன் வரவேற்றார்.

பிரம்மகுமாரிகள் ராஜ யோக தியான மையத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் மல்லிகா, ஜாகீர்உசேன் ஆகியோர் ஓட்டுநர்கள் நீண்ட தூரம் வாகனங்களை இயக்கும் போது ஏற்படும் மன அழுத்தத்திலிருந்து விடுபட செய்ய வேண்டிய தியானங்கள் குறித்து பயிற்சி அளித்தனர். மேலும் அது குறித்த துண்டு பிரசுரங்களை ஓட்டுநர்களிடம் வழங்கினர் . விவேகானந்தா கல்வி நிறுவனங்களின் முதன்மை நிர்வாக அலுவலர் வி.வரதாரஜன், யோகா கல்லூரி முதல்வர் யோகேஸ்வரன், சங்ககிரி வட்டார மோட்டார் வாகன ஆய்வாளர்கள் கே.புஷ்பா, எம்.செந்தில்குமார், கல்லூரி முதல்வர்கள், பேராசிரியர்கள், கல்லூரி பேருந்து, வேன் ஓட்டுநர்கள் உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டனர்.

Tags

Next Story