புத்துணர்வு மற்றும் தியான பயிற்சி - கோட்டாச்சியர் பங்கேற்பு

புத்துணர்வு மற்றும் தியான பயிற்சி - கோட்டாச்சியர் பங்கேற்பு

புத்துணர்வு மற்றும் தியான பயிற்சி 

அரியலூரியில் நடைபெற்ற புத்துணர்வு மற்றும் தியான பயிற்சி முகாமில் குழந்தைகள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.
இந்திய கலாச்சார அமைச்சகம் & ஹார்ட்ஃபுல்னெஸ் இணைந்து யோக மஹோத்ஸவம் எனும் புத்துணர்வு மற்றும் தியான பயிற்சி அரியலூர் , கல்லங்குறிச்சி சாலையிலுள்ள கீதா மகாலில் நடைப்பெற்றது. இதில், அரியலூர் கோட்டாச்சியர் ராமகிருஷ்ணன் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். மேலும் வேகமாக ஓடி கொண்டிருக்கும் இந்த வாழ்க்கையில், நமது வாழ்கையை சிறப்பாக வாழ்ந்திட தியானம் உள்ளிட்ட புத்துணர்வு பயிற்சிகளை பெற்றிட வேண்டும் என கேட்டு கொண்டார். இதனையடுத்து பள்ளி மாணவகளின் பரதநாட்டியம் உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகள் நடந்தபட்டன. மேலும் குழந்தைகள் கல்வியில் சிறந்து விளங்குவதற்கான பயிற்சிகளும் அளிக்கபட்டது குறிப்பிடதக்கது.

Tags

Next Story