பத்து ரூபாய் நாணயங்களை பெற மறுப்பது சட்டப்படி குற்றம் - ஆட்சியர்

பத்து ரூபாய் நாணயங்களை பெற மறுப்பது சட்டப்படி குற்றம் - ஆட்சியர்

ஆட்சியர் சாந்தி

தர்மபுரி மாவட்டத்தில் பத்து ரூபாய் நாணயங்களை பெற மறுப்பது சட்டப்படி குற்றம் எனவும், வர்த்தக நிறுவனங்கள் மற்றும் கடைகளில் 10 ரூபாய் நாணயங்களை பெற்று கொள்ளவேண்டும் எனவும் தர்மபுரி மாவட்ட ஆட்சியர் சாந்தி தெரிவித்துள்ளார்.

இது குறித்து தர்மபுரி மாவட்ட ஆட்சியர் சாந்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, சென்னை உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை முதன்மை செயலாளர் செயலாளர் எழுதியுள்ள கடிதத்தில் 10 ரூபாய் நாணயத்தை சென்னை மாவட்டத்தை தவிர்த்து ஏனைய மாவட்டங்களில் செயல்படும் பெட்ரோல் பங்க்குகள், வர்த்தக நிறுவனங்கள் மற்றும் வங்கிகளில் ஏற்க மறுப்பதால் 10 ரூபாய் நாணயம் குறித்து அனைத்து மாவட்டங்களிலும் விழிப்புணர்வு ஏற்படுத்து மாறு தெரிவிக்கப்பட்டு உள்ளது.

10 ரூபாய் நாணயங்களை வர்த்தக நிறுவனங்கள், வங்கிகள், பெட்ரோல் பங்க்குகள் ஆகியவற்றில் பெற மறுப்பது இந்திய தண்டனை சட்டப்படி குற்றமாகும். எனவே தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து வர்த்தக நிறுவனங்கள். கடைகள், வங்கிகள், பெட்ரோல் பங்க்குகள் ஆகியவற்றில் பொதுமக்களிடம் இருந்து 10 ரூபாய் நாணயங்களை பெற்று கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது

Tags

Next Story