எடப்பாடியில் பட்டாசு கடை அமைக்க மறுப்பு
சேலம் மாவட்டம் எடப்பாடியில் தீபாவளி பண்டிகைக்காக தற்காலிக பட்டாசு கடைகள் அமைக்க அங்கங்கே உரிமம் பெற்று பாதுகாப்பான முறையில் பட்டாசு கடைகள் நடத்தி வந்தனர்.... இந்த நிலையில் சேலம் மாவட்டத்தில் மட்டும் மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் ஒரே இடத்தில் பட்டாசு கடைகள் அமைக்க வேண்டும் எனவும் தனிப்பட்ட முறையில் பட்டாசு அமைக்க முடியாது என்றும் இது தொடர்பாக வருவாய் துறை சார்பில் ஒரே இடத்தில் பட்டாசு கடைகள் அமைக்க இடம் தேர்வு செய்து இருந்தனர்.... தொடர்ந்து எடப்பாடி அடுத்த குரும்பபட்டி பகுதியில் இடம் தேர்வு செய்து பட்டாசு கடைகள் அமைக்க குலுக்கல் முறையில் 25 பட்டாசு கடை உரிமையாளர்களுக்கு இடம் ஒதுக்கப்பட்டது.
மேலும் பருவ மழை தீவிரமடைந்து வரும் நிலையில் நேற்று எடப்பாடியில் பெய்த கனமழையால் தற்காலிக பட்டாசு கடை அமைக்கும் இடத்தில் மழை நீர் குளம் போல் தேங்கி நிற்பதால் பட்டாசு கடை உரிமையாளர்கள் கவலை அடைந்துள்ளனர்.... இதுகுறித்து அவர்கள் கூறுகையில் வருட வருடம் தீபாவளி பண்டிகையின் போது நான்கு நாட்கள் முன்பாகவே தற்காலிக பட்டாசு கடைகள் ஆங்காங்கே உரிமம் பெற்று பாதுகாப்பான முறையில் நாங்கள் பட்டாசு கடை நடத்தி வருகிறோம் என்றும்,
இப்பொழுது சேலம் மாவட்டத்தில் மட்டும் ஒரே இடத்தில் 50 கடைகள் 100 கடைகள் ஒன்றாக அமைக்க வேண்டும் என்று கூறுவதாகவும் தற்பொழுது நேற்று இரவு பெய்த கனமழைக்கே இந்த இடம் தாங்கவில்லை எனவும் இதை நம்பி நாங்கள் எப்படி பட்டாசு கடை போட முடியும் பழைய நடைமுறைப்படியே பட்டாசு கடைகள் அமைப்பதற்கு உரிமம் கொடுத்தால் மட்டுமே நாங்கள் பட்டாசு கடை அமைப்போம் இல்லையென்றால் நாங்கள் யாரும் இந்த இடத்தில் பட்டாசு கடைகள் அமைக்கப் போவதில்லை என்றும் ஒரு மனதாக முடிவு செய்துள்ளனர்.