சதுரகிரி கோவிலுக்கு செல்ல அனுமதி மறுப்பு

சதுரகிரி கோவிலுக்கு செல்ல அனுமதி மறுப்பு
சதுரகிரி கோவிலுக்கு செல்ல பக்தர்கள் செல்ல அனுமதி இல்லாததால் சதுரகிரி கோவில் அடிவாரப் பகுதி வெறிச்சோடி காணப்பட்டது
சதுரகிரி கோவிலுக்கு செல்ல பக்தர்கள் செல்ல அனுமதி இல்லாததால் சதுரகிரி கோவில் அடிவாரப் பகுதி வெறிச்சோடி காணப்பட்டது

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ளது சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில்.இந்த கோயிலானது கடல் மட்டத்திலிருந்து சுமார் 4500 அடி உயரத்தில் அமைந்துள்ளது.

இந்த கோயிலுக்கு மாதந்தோறும் பிரதோஷம் ,அமாவாசை ,பௌர்ணமி உள்ளிட்ட விசேஷ நாட்கள் மட்டுமே பக்தர்கள் கோயிலுக்கு செல்ல அனுமதி என்பது வழங்கப்பட்டு வருகிறது.

கனமழையின் காரணமாக சதுரகிரி கோவிலுக்கு செல்லும் நீரோடைகளான வழுக்குப் பாறை, மாங்கனி ஓடை, சங்கிலி பாறை, எழும்போடை உள்ளிட்ட பகுதிகளில் நீர்வரத்து அதிகமாக இருப்பதாலும்,மலைப்பகுதியில் அவ்வப்போது மழை பெய்து வருவதாலும் பக்தர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு பிரதோஷம் மற்றும் பௌர்ணமியை முன்னிட்டு இன்று ஞாயிறு முதல் டிச.27ந்தேதி வரை 4 நாட்களும் பக்தர்கள் கோயிலுக்கு செல்ல தடை விதிக்கப்படுவதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில் இன்று மார்கழி மாத பிரதோஷத்திற்கு அனுமதி இல்லாததால் சதுரகிரி கோவில் அடிவாரப் பகுதி வெறிச்சோடி காணப்பட்டது. ஏற்கனவே மார்கழி பிறப்பையொட்டி சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவிலுக்கு சென்ற நூற்றுக்கணக்கான பக்தர்கள் கன மழையால் வெள்ளத்தில் சிக்கிய நிலையில் அவர்களை கயிறு கட்டி தீயணைப்பு, வனத்துறை மற்றும் காவல்துறையினர் மீட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story