தூத்துக்குடியில் மண்டல அளவிலான விளையாட்டு போட்டி

தூத்துக்குடியில் மண்டல அளவிலான விளையாட்டு போட்டி
சான்றிதழ் வழங்கல் 
தூத்துக்குடி மண்டல அளவிலான பள்ளி மாணவ மாணவிகளுக்கான விளையாட்டு போட்டி 800க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டு தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர்.

தூத்துக்குடி சான்டி கல்வி நிறுவனம் மற்றும் o 2 ஸ்போர்ட்ஸ் அகாடமி மற்றும் சவுத் இந்தியன் ஸ்போர்ட்ஸ் மீட் அகாடமி ஆகியவை சார்பில் பள்ளி மாணவ மாணவியருக்கான மண்டல அளவிலான விளையாட்டுப் போட்டிகள் தூத்துக்குடி முத்தையாபுரத்தில் வைத்து நடைபெற்றது.

இதில் தூத்துக்குடி திருநெல்வேலி மாவட்டங்களைச் சேர்ந்த 20க்கும் மேற்பட்ட பள்ளிகளை சேர்ந்த சுமார் 800-க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் கலந்து கொண்டனர் ஐந்து வயது முதல் 18 வயது வரை உடைய பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொண்ட இந்த போட்டியில் கராத்தே யோகாசனம் சிலம்பம் ஓவியம் வில்வித்தை உள்ளிட்ட பத்துக்கு மேற்பட்ட போட்டிகள் நடத்தப்பட்டது.

இதில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பதக்கம் சான்றிதழ் மற்றும் பரிசுக்கோப்பை வழங்கப்பட்டது.

Tags

Next Story