போக்குவரத்து விதிமீறுபவர்கள் மீது வழக்கு பதிவு
போக்குவரத்து விதிகள் மீறுபவர்கள் மீது வழக்கு பதிவு
காங்கேயம் போக்குவரத்து காவல் நிலையத்தில் கடந்த ஏப்ரல் 2023ல் மட்டும் போக்குவரத்து விதிமீறலின் கீழ் சுமார் 539 வழக்குகள் பதியப்பட்டு அபராதம் வசூலிக்கப்பட்டது. குடிபோதையில் வண்டி ஓட்டியது, அதிவேகமாக சென்றது, தலைகவசம் அணியத் தவறியது, ஓட்டுனர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டியது போன்ற 20 பிரிவுகளின் சுமார் 500க்கும் மேற்பட்ட வழக்குகள் போடப்பட்டது.
இந்த நிலையில் காங்கயம் துணை கண்காணிப்பாளர் கு. பார்த்திபன் உத்தரவின் பேரில் குற்றங்களை தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நேற்று மாலை காங்கயம் வெள்ளகோவில் சாலையில் முத்தூர் பிரிவில் காங்கேயம் உதவி ஆய்வாளர் கார்த்திக் தலைமையில் போலிசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
இதில் போக்குவரத்து விதிகளை மீறி வாகனங்களை ஓட்டிய 30 பேரின் மீது வழக்குகள் பதியப்பட்டது. மேலும் தினசரி அளவில் இது போன்று காங்கயம் சுற்றுப் பகுதியிலுள்ள தாராபுரம் சாலை, கோவை பிரதான சாலை, காங்கயம் பேருந்து நிலையம், சென்னிமலை ரோடு, திருப்பூர் ரோடு, திருச்சி பிரதான சாலை, பழையக்கோட்டை ரோடு மற்றும் முத்தூர் பிரிவு என அனைத்து இடங்களிலும் போக்குவரத்து விதிமீறல் கீழ் வாகனம் ஓட்டுபவர்களை வாகன சோதனையில் போலீசார் பிடித்து வருகின்றனர்.
இதனால் காங்கயம் பகுதிகளில் வாகன விபத்துகள், திருட்டுகள் போன்ற குற்றங்கள் நடைபெறா வண்ணம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றும் உதவி ஆய்வாளர் கார்த்திக் தெரிவித்தார்.