பொய் வழக்கு பதிவு - ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு

பொய் வழக்கு பதிவு - ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு

 தீக்குளிக்க முயன்ற பெண் 

பொய் வழக்கு பதிவு செய்வதாக ஆட்சியர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி சேர்வார் ஊரணி பகுதியைச் சேர்ந்த சரிதா. கணவனை இழந்த இவர் தனது தாய் இரு மகன்கள் மற்றும் மகளுடன் வசித்து வருகிறார். சகோதரர்கள் குணா, மனோஜ்குமார் இருவரும் தந்தை இழந்த நிலையில் குடும்ப சூழ்நிலை காரணமாக நான்கு சக்கர வாகனத்தை வாடகைக்கு எடுத்து பழ வியாபாரம் செய்து குடும்பத்தை காப்பாற்றி வருகின்றனர். மேலும் சகோதரி மகாலட்சுமியையும் படிக்க வைத்து வருகின்றனர். இந்நிலையில் காரைக்குடி காவல் நிலைய போலீசார் சகோதரர்கள் மீது வழக்கு உள்ளதாக கூறி விசாரணைக்காக அழைத்துச் செல்ல முயன்றனர். அப்போது அப்பகுதி பெண்கள் பொய் வழக்கு போடுவதாக கூறி அனுப்ப மறுத்ததால் காவல்துறைக்கும் பெண்களுக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அப்போது அவர்களின் பாட்டி அழகம்மாள் உடம்பில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. காவலர்கள் மூதாட்டியை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் காரைக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனைத் தொடர்ந்து தனது மகன்கள் மீது பொய் வழக்கு போடுவதாகவும் அவர்களை அடித்து துன்புறுத்துவதாகவும், தன்னையும், தனது வயதான தாயையும் ஆபாச சொற்களால் பேசி அடித்து துன்புறுத்துவதாகவும், இதனால் போலீசாருக்கு பயந்து மகன்கள் தலைமறைவாகி விட்டதாகவும், காவல்துறையின் நடவடிக்கையால் தனது குடும்பம் வாழ வழி இல்லாமல் அவதியுற்று வருவதாக கூறி சரிதா, தனது மகள் மகாலட்சுமியுடன் சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் முன்பு தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனைக் கண்ட பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்கள் விரைந்து வந்து தடுத்து நிறுத்தி முதல் உதவி சிகிச்சை மேற்கொண்டு சிவகங்கை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் அழைத்துச் சென்றனர். இதனால் சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பரபரப்பு ஏற்பட்டது.

Tags

Next Story