சீராகவுள்ள காவேரி குடிநீர் விநியோகம்

சீராகவுள்ள காவேரி குடிநீர் விநியோகம்

மதுரை மாநகராட்சி மற்றும் குடிநீர் வடிகால் வாரிய பொறியாளர்களின் ஒருங்கிணைப்பில் காவேரி குடிநீர் விநியோகம் சீராக நடக்கிறது என மாவட்ட கலெக்டர் சங்கீதா கூறியுள்ளார்.

மதுரை மாநகராட்சி மற்றும் குடிநீர் வடிகால் வாரிய பொறியாளர்களின் ஒருங்கிணைப்பில் காவேரி குடிநீர் விநியோகம் சீராக நடக்கிறது என கலெக்டர் சங்கீதா கூறியுள்ளார்.

காவிரி நீரை ஆதாரமாகக் கொண்ட மேலூர் கூட்டுக் குடிநீர்த் திட்டம் மூலம் மதுரை மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.

இத்திட்டத்திற்கான தலைமைப் பணியிடம் (3 நீர் சேகரிப்புக் கிணறுகள் மற்றும் 1 பொது நீர் சேகரிப்புத் தொட்டி) கரூர் மாவட்டத்தில் உள்ள குளித்தலைக்கு அருகே மேட்டு மகாதானபுரம் என்ற இடத்தில் அமைந்துள்ளது. இங்கிருந்து தினசரி 24 மணி நேரம் நீரேற்றம் செய்யப்படும் குடிநீரின் அளவு 52.81 மில்லியன் லிட்டர் ஆகும். இத்திட்டத்திற்காக மாயனூர் உப மின் நிலையத்தில் இருந்து 9 கீ.மீ. நீளத்திற்கு தனி மின்வழித்தடம் காவேரி ஆற்றுக்கரை ஓரத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மின் வழித்தடத்தில் அடிக்கடி மரக்கிளை முறிவுகளால் மின்தடை ஏற்படுகிறது.

இதனால் குடிநீர் நீரேற்றம் அடிக்கடி பாதிக்கப்படுகிறது. இக்குறைபாட்டைத் தவிர்த்து வடிவமைக்கப்பட்ட அளவு குடிநீர் தங்கு தடையின்றி வழங்கும் பொருட்டு 9 கீ.மீ. நீளத்திற்கு காப்பிடப்பட்ட மின் கடத்தி அமைக்க மின்சார வாரியத்திற்கு 23.01.2023 அன்று ரூ.4.00 கோடி செலுத்தப்பட்டுள்ளது. இதற்கான பணிகள் 04.02.2024 அன்று தொடங்கப்பட்டு 8 கீ.மீ. நீளத்திற்கு பணிகள் முடிவுற்றுள்ளது. இந்தப் பணிகள் நடைபெறும் பொழுது, ஏற்படுகிற மின்தடை காரணத்தால் மட்டுமே வடிவமைக்கப்பட்ட அளவைவிட குறைவான அளவில் குடிநீர் நீரேற்றம் செய்யப்பட்டு வருகிறது. மேற்படி பணியில் மாயனூர் அருகில் இரயில் வழித்தடத்தின் குறுக்கிலும், காவேரி ஆற்றின் தெற்கு கரை கால்வாய் பகுதியைக் கடப்பதற்குமான மீதப் பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்கான இரயில்வே துறையின் அனுமதி பெறப்பட்டு உள்ளது.

இந்தப் பணிகள் ஒரு வார காலத்தில் முடிவடைந்து முழு அளவில் வடிவமைக்கப்பட்ட குடிநீர் அளவு விநியோகம் செய்யப்படவுள்ளது. மேலும், காவேரி குடிநீர் விநியோகம் மதுரை மாநகராட்சி மற்றும் குடிநீர் வடிகால் வாரிய பொறியாளர்களின் ஒருங்கிணைப்பில் சிறந்த முறையில் நடைபெற்று வருகிறது என மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சௌ.சங்கீதா தெரிவித்தார்.

Tags

Next Story