முன்னாள் மதுவிலக்கு குற்றவாளிகளுக்கு மறுவாழ்வு நிதி

முன்னாள் மதுவிலக்கு குற்றவாளிகளுக்கு மறுவாழ்வு நிதி

மறுவாழ்வு நிதி 

விழுப்புரம் மாவட்டத்தில் மனம் திருந்தி வாழும் முன்னாள் மதுவிலக்கு குற்றவாளிகளுக்கு 30 பேருக்கு மறுவாழ்வு நிதியாக தலா ரூ.50 ஆயிரம் வீதம் ரூ.15 லட்சத்திற்கான நிதியுதவி ஆணையை ஆட்சியர் பழனி வழங்கினார்.
விழுப்புரம் மாவட்டத்தில் சட்டம்- ஒழுங்கு பிரச்சினைகள், போதைப்பொருட்களின் விற்பனை, கடத்தப்படுவதை தடுப்பது மற்றும் கண்காணிப்பது தொடர்பான ஆய்வுக்கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் சி.பழனி தலைமை தாங்கி, போதைப்பொருட்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் மற்றும் கண்காணிப்பு விவரங்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். அப்போது தொடர் கண்காணிப்பு மற்றும் சட்ட நடவடிக்கைளை மேற்கொள்ள சார் நிலை அலுவலர்கள் மற்றும் காவல்துறையினருக்கு அறிவுறுத்தினார். அதனை தொடர்ந்து, விழுப்புரம் மாவட்டத்தில் மனம் திருந்தி வாழும் முன்னாள் மதுவிலக்கு குற்றவாளிகளுக்கு மறுவாழ்வு நிதியாக தலா ரூ.50 ஆயிரம் வீதம் 30 பேருக்கு ரூ.15 லட்சத்திற்கான நிதியுதவி ஆணையை கலெக்டர் வழங்கினார். இக்கூட்டத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தீபக் சிவாச், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) அரிதாஸ், உதவி ஆணையர் (கலால்) முருகேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story