தோவாளை கால்வாய் சீரமைக்கும் பணி - ஆட்சியர் ஆய்வு

தோவாளை கால்வாய் சீரமைக்கும் பணி - ஆட்சியர் ஆய்வு

ஆட்சியர் ஆய்வு 

ரூ.1.4 கோடி மதிப்பில் நடைபெறும் தோவாளை கால்வாய் சீரமைப்பு பணியை ஆட்சியர் ஸ்ரீதர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை ஊராட்சி ஒன்றியம், திடல் ஊராட்சிக்குட்பட்ட உலக்கரி – தூவச்சி பகுதியில் நடைபெற்று வரும் தோவாளை சானல் நிரந்தர சீரமைப்பு பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் பி.என்.ஸ்ரீதர், நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, தெரிவிக்கையில்- கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெய்த கனமழையின் போது தோவாளை ஊராட்சி ஒன்றியம் திடல் ஊராட்சிக்குட்பட்ட உலக்கரி - தூவச்சி பகுதி தோவாளை சானலில் உடைப்பு ஏற்பட்டதை தொடர்ந்து மணல் மூட்டைகள் அடுக்கி போர்கால அடிப்படையில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

அரசு நிரந்தரமாக மீட்டெடுக்கும் திட்டத்தின் கீழ் ரூ.1.4 கோடி மதிப்பில் சுமார் 15 கி.மீ நீளத்தில் சீரமைப்பதற்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதனைத்தொடர்ந்து தோவாளை சானலினை நிரந்தரமாக சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இப்பணியினை தரமானதாகவும், உறுதி தன்மையுடனும் அமைத்திட துறை சாரந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதோடு, பணிகளை விரைந்து முடித்து விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வர துறை சார்ந்த அலுவலர்கள் மற்றும் ஒப்பந்ததாரருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் கூறினார். நடைபெற்ற ஆய்வில் உதவி ஆட்சியர் (பயிற்சி) சுஷ்ஸ்ரீ சுவாங்கி குந்தியா, நீர்வள ஆதாரத்துறை செயற்பொறியாளர் பொறி.ஜோதிபாசு, தோவாளை ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் சாந்தினி பகவதியப்பன், உள்ளிட்ட விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story