திருச்செங்கோட்டில் ரேக்ளா ரேஸ் சங்க நிர்வாகிகள் ஆய்வு
திருச்செங்கோட்டில் அதிவேக ரேக்ளா ரேஸ் பந்தய மைதானத்தை மாநில சங்க நிர்வாகிகள் ஆய்வு செய்தனர்.
திருச்செங்கோடு கே எஸ் ஆர் கல்வி நிறுவனம் மற்றும் தமிழ்நாடு ரேக்ளா ரேஸ் சங்கம் இணைந்து நடத்தும் காங்கேயம் காளைகள் கலந்து கொள்ளும் அதிவேக 200 மீட்டர் 300 மீட்டர்ரேக்ளா ரேஸ் பந்தயம் வரும் 16ஆம் தேதி சனிக்கிழமை கே எஸ் ஆர் கல்வி நிறுவன வளாகத்தில் நடக்க உள்ளது, 700க்கும் மேற்பட்ட மாடுகள் கலந்து கொள்ள உள்ளது.
காங்கேயம் என காளைகள் அழிவிலிருந்து காப்பாற்ற இந்த ரேக்ளா ரேஸ் பயன்படுகிறது200 மீட்டர் பந்தயத்தில், முதல் பரிசாக ஆக்டிவா இருசக்கர வாகனமும், இரண்டாம் பரிசாக ஹோண்டா சைன் இரு சக்கர வாகனமும், மூன்றாம் பரிசாக ஒரு பவுன் தங்க நாணயமும் மொத்தம் 30 தங்க நாணய பரிசுகளும் 200 ஆறுதல் பரிசுகளும் வழங்கப்பட உள்ளது. 300 மீட்டர் ரேக்ளாவில் வெற்றி பெறும் காளைகளுக்கு இதேபோல் பரிசுகள் வழங்கப்படும்.
போட்டியாளர்களாகவும் பார்வை யாளர்களாகவும் யார் வேண்டுமானாலும் கலந்து கொள்ளலாம் திர என தமிழ்நாடு ரேக்ளா ரேஸ் சங்க துணை பொது செயலாளர் ஜெயபிரகாஷ் தெரிவித்தார்.பந்தயம் நடைபெறும் இடத்தை கே எஸ் ஆர் கல்வி நிறுவனங்களின் தலைவர் ஆர்.சீனிவாசன்,முதன்மை அதிகாரி அகிலா முத்துராமலிங்கம் மற்றும் ரேக்ளா ரேஸ் பந்தய குலுவினர் உடன் இருந்தனர்