தாய் மகன் தற்கொலை - உறவினர்கள் சாலை மறியல்
சாலை மறியல்
தேனி மாவட்டம், உத்தமபாளையம் அருகே உள்ள ஆனைமலையான் பட்டியில் வசித்து வருபவர் குமரேசன்.இவருக்கு மாரீஸ்வரி (54) என்ற மனைவியும் கிஷோர் குமார் (30) என்ற மகனும் இருந்தனர். கிஷோர் குமாருக்கும் அதை ஊரைச் சார்ந்த ஜீவபிராசியாதேவி என்பவருக்கும் கடந்த 1 வருடத்திற்கு முன்பாக திருமணம் நடைபெற்று உள்ளது. இந்நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் இரண்டு மாதங்களுக்கு மேலாகபிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.
இதற்கிடையே இவர்களது திருமணம் சம்பந்தமாக தேனி நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் கிஷோர் குமாரின் மனைவி தேவியின் குடும்பத்தினர் தொடர்ந்து கிஷோர் குமார் மற்றும் அவரது குடும்பத்தினரை மிரட்டி வந்ததாகவும், மேலும் ஆனைமலையான் பட்டி பகுதியைச் சார்ந்த முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ரவி என்பவரும் இது தொடர்பாக கிஷோர் குமாரின் குடும்பத்தினரை மிரட்டி வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் மன உளைச்சல் ஏற்பட்டு நேற்றைய தினம் கிஷோர் குமார் மற்றும் அவரது தாயார் மாரீஸ்வரி ஆகிய இருவரும் அரளிக்கோட்டை தின்று உயிருக்கு போராடிக் கொண்டிருந்த நிலையில் அவர்களை உத்தமபாளையம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு வந்து சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலன் இன்றி தாய் மகன் இருவரும் உயிர் இழந்தனர். இது தொடர்பாக ராயப்பன்பட்டி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சூழலில் உயிரிழந்த இருவரின் உடல்களும் உடல்கூர் ஆய்வு செய்வதற்காக உத்தமபாளையம் அரசு மருத்துவமனையில் உள்ள பிரேத பரிசோதனை கூடத்தில் வைக்கப்பட்டுள்ளது.
இன்று பிரேத பரிசோதனை நடைபெறும் வரும் சூழலில் உயிரிழந்த கிஷோர் குமாரின் உறவினர்கள் திடீரென உத்தமபாளையம் பைபாஸ் சந்திப்பில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். தற்கொலை செய்து கொண்ட இருவரின் இறப்பிற்கும் நியாயம் கிடைக்க வேண்டும், இந்த தற்கொலைக்கு தூண்டுதலுக்கு காரணமாக இருந்த கிஷோர் குமாரின் மனைவி விட்டார்களே கைது செய்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், மேலும் இதில் கிஷோர் குமாரின் குடும்பத்தை மிரட்டிய ரவி என்பவர் மீது உடனடியாக கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியல் போராட்டம் நடத்தினார்.
இதனை அடுத்து உத்தமபாளையம் ஏ எஸ் பி மதுக்குமாரி தலைமையிலான காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சாலை மறியலில் ஈடுபட்டு உள்ள இடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அந்த பேச்சுவார்த்தையின் போது இந்த சம்பவம் தொடர்பாக விரிவான விசாரணை மேற்கொள்ளப்படும், மேலும் இதில் சம்பந்தப்பட்டவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என அவர்கள் உறுதியளித்ததன் பேரில் சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.
தொடர்ந்து உடற்கூறு ஆய்வு நடைபெற்று வருகிறது தொடர்ந்து உடற்கூறு ஆய்வு நடைபெற்று வருகிறது இந்த திடீர் சாலை மறியல் போராட்டத்தால் அப்பகுதியில் அரை மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.