இளைஞர்களை தாக்கிவரை செய்ய கோாி உறவினர்கள் சாலை மறியல்!

இளைஞர்களை தாக்கிவரை கைது செய்ய கோாி உறவினர்கள் சாலை மறியல்.
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே கோயில் திருவிழாவில் ஏற்பட்ட பிரச்சனையில் ஒரு சமூகத்தை சேர்ந்த இரண்டு இளைஞர்களை தாக்கியவா்களை கைது செய்ய கோாி அவர்களது உறவினா்கள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.அப்போது அவர்களே தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டு தாக்குதல் நடத்திய மற்றொரு சமூகத்தைச் சேர்ந்த ஒரு இளைஞரை பிடித்து அடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே உள்ள வெள்ளாள விடுதியில் கடந்த 4 நாட்களுக்கு முன்பு நடைபெற்ற கோவில் திருவிழாவில் இரு பிரிவைச் சேர்ந்த வாலிபர்களிடையே மோதல் ஏற்பட்டது. பின்னர் போலீசார் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். இந்நிலையில் நேற்று இரவு அதிரான்விடுதியை சேர்ந்த மாதவன் (20) பாக்யராஜ் (36) ஆகியோர் இருசக்கர வாகனத்தில் சென்ற போது அவர்களை மற்றொரு பிரிவைச் சேர்ந்த 6 இளைஞர்கள் வழிமறித்து தாக்கினர்.இதில் படுகாயமடைந்த இருவரும் புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து மாதவன் கொடுத்த புகாரின்பேரில் மழையூர் போலீசார் அதிரான் விடுதியை சேர்ந்த பால கணபதி, ராகுல், குமரப்பன். தேவா, கணேசன், முருகேசன் ஆகிய 6 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருவதாக கூறி எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று வாலிபர்களை தாக்கிய குற்றவாளிகளை கைது செய்யக் கோரி அவர்களது உறவினர்கள் இன்று மழையூர் காவல் நிலையம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்த ஆலங்குடி போலீஸ் துணை சூப்பிரெண்டு பவுல்ராஜ் மற்றும் போலீசார் அங்கு சென்று மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதையடுத்து சாலை மறியலை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதனிடையே அவ்வழியாக சென்ற அதிரான்விடுதியை சேர்ந்த தேவா என்ற இளைஞரை வழிமறித்து பிடித்த அம்மக்கள் அந்த இளைஞர்தான் தங்கள் சமூகத்தைச் சேர்ந்த இதுவரை தாக்கியதாக கூறி அவரை அடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இந்த மறியலால் அப்பகுதியில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்ட நிலையில் இரண்டு இளைஞர்களை தாக்கியதாக மாற்று சமூகத்தைச் சேர்ந்த சேர்ந்த முருகேசன் (22), தேவா (21) ஆகிய 2 பேரை மழையூர் போலீசார் கைது செய்தனர்.

Tags

Next Story