பள்ளி மாணவன் தாக்கப்பட்டதில் உறவினர்கள் சாலை மறியல்!

பள்ளி மாணவன் தாக்கப்பட்டதில் உறவினர்கள் சாலை மறிஎழில் ஈடுபட்டனர்.
புதுக்கோட்டை மாவட்டம் மழையூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவன் பாலமுருகன் பள்ளி முடித்து நேற்று வெளியில் வந்து பேருந்துக்காக காத்திருந்தபோது ஜாதியை பாகுபாட்டின் காரணமாக மாற்று சமூகத்தை சேர்ந்த இளைஞர்கள் ஆறு பேர் கடத்திச் சென்று தாக்கியதாகவும் தற்போது மாணவன் பாலமுருகன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் இந்த சம்பவத்தில் குற்றவாளிகளை கைது செய்ய வலியுறுத்தி அவரது உறவினர்கள் தீர்த்தானிப்பட்டி கிராமத்தில் ரோட்டில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மழையூர் அரசு பள்ளியில் பயிலும் பட்டியல் இனத்தைச் சேர்ந்த +2 மாணவன் பாலமுருகன் தாக்கப்பட்ட விவகாரத்தில் மாற்று சமூகத்தைச் சேர்ந்த ஆறு கல்லூரி மாணவர்கள் உள்ளிட்ட இளைஞர்கள் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட ஆறு பிரிவுகளின் கீழ் மழையூர் போலீசார் வழக்கு பதிவு. இந்த நிலையில் போராட்டக்காரர்களிடம் மலையூர் காவல்துறையினர் சமாதானம் பேசி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் அவர்களை கைது செய்யும் வரை போராட்டத்தை கைவிட மாட்டோம் என கூறினார்கள் காலை நேரம் என்பதால் பள்ளி கல்லூரி அரசு வேலைக்கு செல்வோர் மிகுந்த அவதிப்பட்டு உள்ளனர்.
Next Story