நடத்தை விதிகளில் தளர்வு, தேர்தல் ஆணையத்திற்கு நன்றி - விக்கிரமராஜா

நடத்தை விதிகளில் தளர்வு, தேர்தல் ஆணையத்திற்கு நன்றி -  விக்கிரமராஜா

விக்கிரமராஜா 

வாக்குப்பதிவு முடிந்தவுடன் தேர்தல் நடத்தை விதிகளில் தளர்வு செய்த தேர்தல் ஆணையத்திற்கு தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா நன்றி தெரிவித்தார்.

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாவட்ட பொதுக்குழு கூட்டம் ஈரோட்டில் நடைபெற்றது.. இதில் அவ்வமைப்பின் மாநில தலைவர் விக்கிரமராஜா கலந்து கொண்டார்.பின்னர் செய்தியாளர்களை சந்தித்த விக்கிரமராஜா, தேர்தல் நடைமுறை 19.ம் தேதி வாக்கு பதிவு முடிந்தவுடன் தளர்வு செய்தமைக்காக தேர்தல் ஆணையத்திற்கு நன்றி தெரிவித்தார்.

வணிகர் தினமான மே 5 விடுமுறை தினமாக தமிழக அரசு அறிவிக்க வேண்டும் என்றும் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் கடைகளை கட்டி ஏற்கனவே அங்கு இருந்த வியாபாரிகளுக்கு நியாயமான வாடகை விகிதத்தில் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்றார் மே 5 மாநாடு இந்த ஆண்டு மதுரையில் நடைபெற உள்ளது. இதனை விடுதலை முழக்க மாநாடாக இந்த ஆண்டு மே 5 வணிகர் மாநாடு நடைபெற உள்ளது என்றார் மாநிலத்திற்கு உரிய வருவாய் அதிகரித்தால் மிக்க மகிழ்ச்சி, ஜிஎஸ்டி என்பது இந்தியாவில் இரண்டாவது மாநிலமாக அதிகம் செலுத்தக்கூடிய மாநிலம் தமிழ்நாடு உள்ளது. தமிழ்நாடு கொடுக்கும் பணத்தில் அதிகமாக தமிழ்நாட்டிற்கு கொடுத்தால் மாநிலம் வளமாக இருக்கும் என்றார்

Tags

Read MoreRead Less
Next Story