1000 ஆலிவர் ரெட்லி ஆமை குஞ்சுகள் விடுவிப்பு
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே கூழையார் கிராமத்தில் வனத்துறையின் ஆமைக் குஞ்சுகள் பொறிப்பகம் செயல்பட்டு வருகிறது. இங்கு பழையாறு முதல் திருமுல்லைவாசல் வரையிலான கடலோர பகுதிகளில் சேகரிக்கப்படும் ஆலிவ் ரெட்லி ஆமை முட்டைகள் பொறிப்பகத்தில் பாதுகாக்கபட்டு, பொறித்த ஆமை குஞ்சுகளை கடலில் விடும் நிகழ்வு நடைபெற்றது.
இதில் ஆயிரம் ஆமை குஞ்சுகளை கடலில் விட்டனர். அரிய வகை ஆமை இனமான ஆலிவர் ரெட்லி பசுபிக் பெருங்கடல் பகுதியில் மட்டுமே வசிக்கும், இவ்வகை ஆமையானது ஆண்டுதோறும் டிசம்பர் மாதம் இனப்பெருக்கத்திற்காக தமிழக கடற்கரை பகுதிகளுக்கு வந்து, ஆலிவ் ரெட்லி ஆமைகள் ஒவ்வொன்றும் சுமார் 150 முதல் 180 முட்டைகள் வரை இடும், இவ்வாறு கடற்கரை மணல் பரப்பில் ஆமைகள் இடும் முட்டைகளை வனத்துறையினர் சேகரித்து வனத்துறைக்கு சொந்தமான ஆமை குஞ்சுகள் பொறிப்பகத்தில் பாதுகாப்பாக வைத்து பராமரிக்கப்படுகின்றன. பின்னர் குஞ்சுகள் பொறித்த நிலையில் அவைகளை கடலில் விட்டுவிகின்றனர் அவைகள் அனைத்தும் பசிபிக் கடல் பகுதிகளுக்கு சென்று வளர்ந்து மீண்டும் தமிழக கடற்கரையில் முட்டையிட வருகின்றன.