பேச்சிப்பாறை அணையிலிருந்து 1000 கன அடி நீர் திறப்பு

பேச்சிப்பாறை அணையிலிருந்து  1000  கன அடி நீர் திறப்பு

நீர் திறப்பு 

குடிநீரில் கடல் நீர் புகுவதை தடுக்க பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் விடுத்த கோரிக்கையை ஏற்று பேச்சிபாறை அணையிலிருந்து 1000 கன அடி நீர் திறக்கப்பட்டது.

கன்னியாகுமரி மாவட்டம் பேச்சிப்பாறை அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர் தாமிரபரணி ஆற்றுப்பகுதியான குழித்துறை, மங்காடு, வைக்கலூர் மற்றும் பரக்காணி வழியாக கடலில் சென்றடையும். தற்போது கடும் வறட்சி காரணமாக தாமிரபரணி ஆற்றில் தண்ணீர் இல்லாமல் இதன் இதனால் கடல் நீர் பரக்காணி உள்ளிட்ட ஆற்றுப்பகுதியில் உட்புகுந்தது.

பொது மக்களுக்கு வழங்கப்படும் குடிநீர் உப்பு நீராகவும், விவசாய தேவைகள் பாதிக் கப்படுவதாக பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மாவட்ட ஆட்சியருக்கு மனு அளித்தனர்.இதைத்தொடர்ந்து,தமிழ்நாடு அரசுக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது.இதனை கருத்தில் கொண்டு உப்புநீரை கடலில் சேர்க்கும் வகையில் தமிழ்நாடு அரசு பேச்சிப்பாறை அணையில் இருந்து சுமார் 1000 கனஅடி தண்ணீர் மதகுகள் வழியாக திறந்துவிட அனுமதி வழங்கியது.

இதைத் தொடர்ந்து நேற்று மாலை 6 மணிக்கு பேச்சிபாறை அணையில் இருந்து ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. மேலும் தண்ணீர் திறக்கப்பட்டதால் ஆற்றின் கரையோரம் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தி உள்ளார்.

Tags

Next Story