அதிமுக தேர்தல் பிரச்சார முழக்கம் வெளியீடு
அதிமுக
சென்னை ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகமான எம்ஜிஆர் மாளிகையில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 76 ஆவது பிறந்த நாளையொட்டி தலைமை அலுவலகத்தில் உள்ள அவரின் உருவ சிலைக்கு மரியாதை செலுத்தி பிறந்தநாள் விழா கொண்டாடும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதைத் தொடர்ந்து, நாடாளுமன்ற மக்களவை தேர்தலை முன்னிட்டு அதிமுக தேர்தல் பிரச்சார முழக்கம் தமிழர் உரிமை மீட்போம் தமிழ்நாடு காப்போம்
என்பதை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டார். இந்த வரிகள் கொண்ட பேட்ச் வெளியிட்டதோடு, AI தொழில்நுட்பம் மூலம் மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா புரட்சி திமுக ஆட்சியில் செய்த மக்கள் பணிகள் மற்றும் அதிமுக தலைமை வெற்றி பெற வேண்டும் என்று பேசுவது போன்ற காணொளியையும் வெளியிட்டார். தொடர்ந்து, செய்தியாளர்களை சந்தித்தவர், திமுக செயல்பாடுகள் இன்று மோசமாக உள்ளது. அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் 16,619 கேள்விகள் எழுப்பினர். 9,695 தான் திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர். நாடாளுமன்றத்தில் தமிழக மக்கள் குரல் ஒலிக்க அதிமுகவை வெற்றி பெற செய்ய வேண்டும் என்று பேசினார்.