சோனா கல்லூரியில் 15-ந் தேதி கலை விழா

சோனா கல்லூரியில் 15-ந் தேதி கலை விழா

விழிப்புணர்வு பிரசுரங்கள்

சோனா கல்லூரியில் 15-ந் தேதி கலை விழாவை முன்னிட்டு விழிப்புணர்வு பிரசுரங்கள் வெளியீடு
சேலம் சோனா கல்லூரியில் தேசிய அளவில் கல்லூரி மாணவர்களுக்கான கலை விழா போட்டிகள் (க்ரிவாஸ்-24) வருகிற 15-ந் தேதி கல்லூரி வளாகத்தில் நடைபெற உள்ளது. விழாவில் கல்லூரி மாணவர்களுக்கான புகைப்படம் எடுத்தல், பாடல், பேஷன் ஷோ, நடனம், குறும்படம் உள்ளிட்ட பிரிவுகளில் போட்டிகள் நடைபெற உள்ளன. இந்த போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெறும் மாணவர்களுக்கு பரிசுகள். சான்றிதழ்கள் வழங்கப்படும் என்று சோனா கல்லூரி முதல்வர் எஸ்.ஆர்.செந்தில்குமார் கூறினார். இதற்கிடையே இந்த கலை விழா போட்டி (க்ரிவாஸ்-24) தொடர்பான விழிப்புணர்வு பிரசுரங்கள் வெளியிடப்பட்டன. நிகழ்ச்சியில் முதன்மை ஒருங்கிணைப்பாளர் ரேணுகா, ஒருங்கிணைப்பாளர் செந்தில்வடிவு மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Read MoreRead Less
Next Story