தஞ்சாவூரில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு
வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு
தஞ்சாவூரில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் தெ.தியாகராஜன் வெள்ளிக்கிழமையன்று, கடந்த 5.1.2023 முதல் 26.10.2023 வரை வாக்காளர் பட்டியல் தொடர் திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்ட, வரைவு வாக்காளர் பட்டியலை அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் வெளியிட்டார். தற்போது வெளியிடப்பட்டுள்ள வரைவு வாக்காளர் பட்டியலின்படி தஞ்சாவூர் மாவட்டத்தில் 9,74,896 ஆண் வாக்காளர்களும், 10,25,988 பெண் வாக்காளர்களும், 156 இதர பாலினத்தவர்கள் உட்பட மொத்த வாக்காளர்கள் 20,01,040 உள்ளனர். இதில், திருவிடைமருதூர் சட்டமன்றத் தொகுதியில் 1,27,433 ஆண் வாக்காளர்களும், 1,30,011 பெண் வாக்காளர்கள் மற்றும் 12 மூன்றாம் பாலினத்தவர் உட்பட மொத்தம் 2,57,456 வாக்காளர்கள் உள்ளனர். கும்பகோணம் தொகுதியில் 1,28,382 ஆண் வாக்காளர்களும், 1,34,913 பெண் வாக்காளர்கள் மற்றும் 14 மூன்றாம் பாலினத்தவர் உட்பட மொத்தம் 2,63,309 வாக்காளர்கள் உள்ளனர். பாபநாசம் தொகுதியில் 1,25,520 ஆண் வாக்காளர்களும், 1,31,058 பெண் வாக்காளர்கள் மற்றும் 18 மூன்றாம் பாலினத்தவர் உட்பட மொத்தம் 2,56,596 வாக்காளர்கள் உள்ளனர். திருவையாறு தொகுதியில் 1,28,764 ஆண் வாக்காளர்களும், 1,34,869 பெண் வாக்காளர்கள் மற்றும் 20 மூன்றாம் பாலினத்தவர் உட்பட மொத்தம் 2,63,653 வாக்காளர்கள் உள்ளனர். தஞ்சாவூர் தொகுதியில் 1,29,254 ஆண் வாக்காளர்களும், 1,40,860 பெண் வாக்காளர்கள் மற்றும் 57 மூன்றாம் பாலினத்தவர் உட்பட மொத்தம் 2,70,171 வாக்காளர்கள் உள்ளனர். ஒரத்தநாடு தொகுதியில் 1,17,411 ஆண் வாக்காளர்களும், 1,24,146 பெண் வாக்காளர்கள் மற்றும் 3 மூன்றாம் பாலினத்தவர் உட்பட மொத்தம் 2,41,560 வாக்காளர்கள் உள்ளனர். பட்டுக்கோட்டை தொகுதியில் 1,14,504 ஆண் வாக்காளர்களும், 1,24,053 பெண் வாக்காளர்கள் மற்றும் 24 மூன்றாம் பாலினத்தவர் உட்பட மொத்தம் 2,38,581 வாக்காளர்கள் உள்ளனர். பேராவூரணி தொகுதியில் 1,03,628 ஆண் வாக்காளர்களும், 1,06,078 பெண் வாக்காளர்கள் மற்றும் 8 மூன்றாம் பாலினத்தவர் உட்பட மொத்தம் 2,09,714 வாக்காளர்கள் உள்ளனர். கடந்த 5.1.2023 முதல் 26.10.2023 வரை தொடர் திருத்தப் பணிகளில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பித்தவர்களில் தகுதியான நபர்களின் படிவங்கள் ஏற்கப்பட்டு 14,313 நபர்களின் பெயர் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது. மேலும், இறந்த, இடம்பெயர்ந்த வாக்காளர்கள் 56,389 நபர்களின் பெயர்களை உரிய விசாரணை அடிப்படையில் நீக்கப்பட்டுள்ளது.
Next Story