பிளவக்கல் பெரியாறு அணையிலிருந்து உபரி நீர் திறப்பு

பிளவக்கல் பெரியாறு அணையிலிருந்து  உபரி நீர் திறப்பு

பிளவக்கல் பெரியாறு அணை

தொடர் மழையின் காரணமாக பிளவக்கல் பெரியாறு அணையின் நீர்மட்டம் 43 அடியை எட்டிய நிலையில் அணையின் பாதுகாப்பு கருதி 50 கன அடி வீதம் உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை துவங்கி பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக விருதுநகர் மாவட்டத்திலும் தொடர்ச்சியாக மழை பெய்து வருவதால் அணைகள் மற்றும் நீர்நிலைகள் என்பது வேகமாக நிரம்பியுள்ளன. விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் அமைந்துள்ளது 47 அடி முழு கொள்ளளவு கொண்ட பிளவக்கல் பெரியாறு அணை. இந்த அணையை நம்பி சுமார் 50ற்கும் மேற்பட்ட கண்மாய் விவசாயிகள் பாசன வசதி பெறுகின்றனர். கடந்த சில தினங்களாக வத்திராயிருப்பு சுற்றுவட்டார பகுதிகளிலும், மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளிலும் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக பிளவக்கல் பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்துக் கொண்டே உள்ளது. இந்த நிலையில் 47 அடி முழு கொள்ளளவு கொண்ட பிளவக்கல் பெரியாறு அணையின் நீர்மட்டம் இன்றைய நிலவரப்படி 43 அடியை எட்டியுள்ளதால் இந்த அணையை நம்பி உள்ள விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தொடர்ந்து அணைக்கு நீர் வந்து கொண்டிருப்பதால் அணையின் பாதுகாப்பு கருதி 50 கன அடி வீதம் உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருவதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். மேலும் அதிகாரப்பூர்வமாக விரைவில் அணையிலிருந்து அமைச்சர்கள் மூலம் நீர் திறக்கப்படும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags

Next Story