சேலம் நாடாளுமன்ற தொகுதியில் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு

சேலம் நாடாளுமன்ற தொகுதியில் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு

இறுதி வேட்பாளர் பட்டியல்

சேலம் நாடாளுமன்ற தொகுதியில் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு. சேலத்தில் 25 வேட்பாளர்கள் போட்டி.
சேலம் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் இறுதி வேட்பாளர் பட்டியல் நேற்று மாலை வெளியிடப்பட்டது. இதில் 25 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். நாடாளுமன்ற தேர்தல் தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் வருகிற 19-ந் தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 20-ந் தேதி தொடங்கி 27-ந் தேதி வரை நடைபெற்றது. சேலம் நாடாளுமன்ற தொகுதியில் மொத்தம் 39 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர். ஒரு வேட்பாளர் ஒன்றுக்கும் மேற்பட்ட மனுக்கள் தாக்கல் செய்ததால் 52 மனுக்கள் பெறப்பட்டன. பின்னர் வேட்புமனு தாக்கல் மீதான பரிசீலனை கடந்த 28-ந் தேதி நடைபெற்றது. இதில் தி.மு.க., அ.தி.மு.க., பா.ம.க., நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் உள்பட மொத்தம் 27 பேரின் வேட்புமனுக்கள் ஏற்று கொள்ளப்பட்டன. 12 பேரின் வேட்புமனுக்கள் நிராகரிக்கப்பட்டன. இதனிடையே நேற்று தேர்தலில் போட்டியிட விரும்பாதவர்கள் வேட்புமனுவை வாபஸ் பெற கடைசி நாளாகும். மாலை 3 மணி வரை வேட்புமனுவை வாபஸ் பெற நேரம் கொடுக்கப்பட்டிருந்தது. இதில் 2 சுயேச்சைகள் தேர்தலில் போட்டியிட விரும்பவில்லை என கூறி தங்களது வேட்புமனுவை வாபஸ் பெற்றனர். இதையடுத்து இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் சேலம் நாடாளுமன்ற தொகுதியில் தி.மு.க., அ.தி.மு.க., பா.ம.க., நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் உள்பட மொத்தம் 25 பேர் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டனர். இதையடுத்து சுயேச்சைகளுக்கு சின்னம் ஒதுக்கும் பணி மாவட்ட தேர்தல் அலுவலர் பிருந்தாதேவி தலைமையில், தேர்தல் பொது பார்வையாளர் ஜி.பி.பாட்டீல் முன்னிலையில் நடைபெற்றது. இதில் வேட்பாளர்கள் மற்றும் அவர்கள் சார்பில் சிலர் கலந்து கொண்டனர். முடிவில் சுயேச்சைகளுக்கான சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதன்படி இறுதி வேட்பாளர்கள் பட்டியல் கட்சி மற்றும் சின்னம் விவரம் வருமாறு:= 1. டி.எம்.செல்வகணபதி (தி.மு.க.) -உதயசூரியன் 2. விக்னேஷ் (அ.தி.மு.க.) -இரட்டை இலை 3. அண்ணாதுரை (பா.ம.க.) - மாம்பழம் 4.மனோஜ்குமார் (நாம் தமிழர் கட்சி) -மைக் 5.முரளி (பகுஜன் சமாஜ் கட்சி) - யானை 6. அம்பேத்கர் (அம்பேத்கர் ரைட் பார்டி ஆப் இந்தியா)-கோட்டு 7. சுதர்சனம் (அறவோர் முன்னேற்ற கழகம்)-வைரம் 8. மாணிக்கம் (உழைப்பாளி மக்கள் கட்சி)-ஆட்டோ ரிக்‌ஷா 9. ராமச்சந்திரன் (தேசிய மக்கள் கழகம்)-தர்ப்பூசணி 10. அகமது ஷாஜகான் (சுயே)-கியாஸ் சிலிண்டர் 11. இந்திரஜித்குப்தா (சுயே)-பானை 12. கருணாகரன் (சுயே)-மடிக்கணினி 13. கோவிந்தன் (சுயே)-தொலைக்காட்சி பெட்டி 14. சண்முகம் (சுயே)-வாளி 15 சாந்தலிங்கம் (சுயே)-குடை மிளகாய் 16.பழனிவேல் (சுயே)-விளக்கேற்றி 17.பாலாஜி (சுயே)-கிரிக்கெட் பேட்ஸ்மேன் 18.பிரபாகரன் (சுயே)-பலாப்பழம் 19. முத்துசாமி (சுயே)-கால்குலேட்டர் 20.ராமசுந்தரம் (சுயே)-பிரஷர் குக்கர் 21. அ.ராஜா (சுயே)-மோதிரம் 22.ஸ்ரீ.ராஜா (சுயே)-மின்கல விளக்கு 23. விக்னேஷ் (சுயே)-ஈட்டி எறிதல் 24.ஜெகநாதன் (சுயே)-கரும்பு விவசாயி 25.ஜோதிலிங்கம் (சுயே)-கணினி.

Tags

Read MoreRead Less
Next Story