பெரம்பலூரில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு

பெரம்பலூரில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு


பெரம்பலூரில் இறுதி வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டார்


பெரம்பலூரில் இறுதி வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டார்

பெரம்பலூர் மாவட்டத்தில் இறுதி வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சியர் கற்பகம் வெளியிட்டார்..... இந்திய தேர்தல் ஆணையத்தின் கால அட்டவணைப்படி பெரம்பலூர் மாவட்டத்திற்கான இறுதி வாக்காளர் பட்டியலினை மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான கற்பகம் ஜனவரி 22 ஆம்தேதி அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வெளியிட்டார். இது குறித்து மாவட்ட ஆட்சியர் தெரவித்தபோது. பெரம்பலூர் மாவட்டத்தில் 27.10.2023 அன்று வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் . பெரம்பலூர் சட்டமன்ற தொகுதியில் 2,94,314 வாக்காளர்களும், குன்னம் சட்டமன்ற தொகுதியில் 2,68,185 வாக்காளர்களும் ஆக மொத்தம் 5,62,499 வாக்காளர்கள் இடம் பெற்றிருந்தனர்.

அதன் பின்னர் நடைபெற்ற சிறப்பு சுருக்கமுறை திருத்த பணியில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் தொடர்பாக பெறப்பட்ட படிவங்களின் பேரில் . பெரம்பலூர் சட்டமன்ற தொகுதியில் 3,334 ஆண் வாக்காளர்களும், 4,330 பெண் வாக்காளர்களும், இதர 4 வாக்காளர்களும் குன்னம் சட்டமன்ற தொகுதியில் 2,721 ஆண் வாக்காளர்களும், 3,482 பெண் வாக்காளர்களும் வாக்காளர் பட்டியலில் புதியதாக சேர்க்கப்பட்டுள்ளனர். தற்போது வெளியிடப்படுகின்ற இறுதி வாக்காளர் பட்டியலின் படி பெரம்பலூர் சட்டமன்ற தொகுதியில் உள்ள 332 வாக்கு சாவடிகளில் மொத்தம் 2,98,750 வாக்காளர்கள் உள்ளனர். இதில் 1,45,293 ஆண் வாக்காளர்களும், 1,53,445 பெண் வாக்காளர்களும், 12 இதர வாக்காளர்களும் உள்ளனர்.

குன்னம் சட்டமன்ற தொகுதியில் உள்ள 320 வாக்கு சாவடிகளில் மொத்தம் 2,72,998 வாக்காளர்கள் உள்ளனர். இதில் 1,35,008 ஆண் வாக்காளர்களும், 1,37,990 பெண் வாக்காளர்களும், என பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள இரண்டு சட்டமன்ற தொகுதிகளையும் சேர்த்து மொத்தம் 5,71,748 வாக்காளர்கள் உள்ளனர். இதில் 2,80,301 ஆண் வாக்காளர்களும், 2,91,435 பெண் வாக்காளர்களும், 12 இதர வாக்காளர்களும் உள்ளனர். வரைவு வாக்காளர் பட்டியலின்படி பெரம்பலூர் மாவட்டத்தில் 5,62,499 வாக்காளர்கள் இருந்தனர். சிறப்பு சுருக்கத்திருத்த முகாம்கள் உள்ளிட்ட பல்வேறு தொடர் நடவடிக்கைகள் மூலம் பெரம்பலூர் மாவட்டத்தில், வரைவு வாக்காளர் பட்டியலில் இருந்ததைவிட 9,249 வாக்காளர்கள் கூடுதலாக சேர்க்கப்பட்டு தற்போது 5,71,748 உள்ளனர். வாக்காளர் பட்டியலை விட 1.64% வாக்காளர்கள் அதிகமாக சேர்க்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், வாக்காளர் தொடர் திருத்தத்தின் போது பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் மற்றும் முகவரி மாற்றம் மேற்கொள்ள தவறியவர்கள் ஜனவரி - 22ம் தேதி முதல் தொடர்புடைய வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள், உதவி வாக்காளர் பதிவு அலுவலர்கள் மற்றும் வாக்காளர் பதிவு அலுவலர் ஆகிய அலுவலகங்களில் முகவரி மாற்றம் செய்துகொள்ளலாம். என தெரிவித்தார். இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் வடிவேல் பிரபு, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் லலிதா, வாக்காளர் பதிவு அலுவலர், சார் ஆட்சியர் கோகுல் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் மஞ்சுளா, தேர்தல் வட்டாட்சியர் அருளானந்தம், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரிதிநிதிகள் மற்றும் அனைத்து வட்டாட்சியர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story