வ.ஊ.சி.பூங்காவில் இருந்த பாம்புகள் வன பகுதிக்குள் விடுவிப்பு

கோவை வ.உ.சி. உயிரியல் பூங்கா மூடப்பட்டதையடுத்து அதில் இருந்த பாம்புகள் வனத்துறையினரின் உதவியோடு வனப்பகுதிக்குள் விடப்பட்டன.
கோவை: மக்களின் பொழுதுபோக்கு இடங்களின் ஒன்றான வ.உ.சி. உயிரியல் பூங்காவில் முதலை,பாம்பு,குரங்கு,கிளிகள்,பெலிகான்,கழுகு,மான்,கீரி உள்ளிட்ட உயிரினங்கள் பூங்காவில் இருந்தன.இந்த நிலையில்போதிய இடவசதி இல்லை என கூறி மத்திய வன பாதுகாப்பு ஆணையம் பூங்காவிற்கான உரிமத்தை கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ரத்து செய்தது. இதனை அடுத்து வ.ஊ.சி உயிரியல் பூங்காவில் இருந்த உயிரினங்கள் வண்டலூர் மற்றும் வேலூர் உயிரியல் பூங்காவிற்கு மாற்றப்பட்டது.தற்போது அங்கு மயில்,பெலிகான்,குருவிகள் மான் உள்ளிட்ட சில விலங்குகள் மட்டுமே உள்ள நிலையில் பத்து நாகப்பாம்புகள்,மூன்று கண்ணாடிவிரியன்,நான்கு சாரைப்பாம்புகளை வனத்திற்குள் விட திட்டமிடப்பட்டு அதன் அடிப்படையில் வனத்துறையினர் பாம்பு பிடி வீரர்களை வரவழைத்து பாம்புகள் பிடிக்கபட்டு அவைகள் பத்திரமக பெட்டியில் அடைத்து வனத்துறை வாகனம் மூலம் எடுத்து செல்லபட்டது.கால்நடை மருத்துவர் சுகுமார் மற்றும் வனத்துறை அதிகாரிகள் உதவியுடன் பாம்புகளை சிறுவாணி வனப்பகுதியில் கொண்டு சென்று விடப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பாம்புகளை அடர் வனத்துக்குள் விடுவிப்பதன் மூலம் அதன் வாழ்வு புத்துயிர் பெறும் என தன்னார்வலர்கள் தெரிவித்தனர்.

Tags

Next Story