சாத்தனூர் அணையிலிருந்து தண்ணீர் திறப்பு

சாத்தனூர் அணையிலிருந்து தண்ணீர் திறப்பு

சாத்தனூர் அணையிலிருந்து திறக்கப்படும் தண்ணீர்


திருவண்ணாமலை மாவட்டம்: சாத்தனூர் அணைக்கு 3500 கன அடி தண்ணீர வருகிறது. இதில் 11 கண் மதகு வழியாக 1900 கன அடி தண்ணீர் தென்பெண்ணை ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்திலேயே மிகவும் பிரசித்தி பெற்ற சுற்றுலாத்தலமாக விளங்குவது சாத்தனூர் அணையாகும். பொன்விழா கண்ட இந்த அணை 119 அடி உயரம் கொண்டது. விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று விவசாயம் பாசனத்திற்காக சாத்தனூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டதால் நூறு அடியாக நீர்மட்டம் குறைந்தது.

இந்நிலையில் கிருஷ்ணகிரி அணையில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் சாத்தனூர் அணை சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக தொடர்ந்து மழை பெய்து வருவதால் சாத்தனூர் அணைக்கு 3500 கன அடி தண்ணீர் வினாடிக்கு வந்து கொண்டு இருக்கிறது. இதனால் சாத்தனூர் அணை 117 அடியாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது.

அணையின் பாதுகாப்புக் கருதி சாத்தனூர் அணைக்கு வரக்கூடிய தண்ணீர் நீர் மின்சாரம் தயாரிக்க கூடிய வழியாக ஆயிரம் கன அடி தண்ணீரும் 11 கண் மதகு வழியாக 1900 கன அடி தண்ணீரும் தென்பெண்ணை ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் தென்பெண்ணை ஆற்றங்கரை ஓரமுள்ள திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர் மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

தென்பெண்ணை ஆற்றில் பொதுமக்கள் யாரும் இறங்கவோ, கால்நடைகளை அழைத்துச் செல்லவோ வேண்டாம் என பொதுப்பணித்துறை ஊழியர்கள் வருவாய்த்துறையினர் கரையோரம் உள்ள கிராம பொது மக்களுக்கு ஒலிபெருக்கி மூலம் அறிவுறுத்தி வருகின்றனர்.

Tags

Next Story