குண்டேரிப்பள்ளம் அணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறப்பு
தண்ணீர் திறப்பு
குண்டேரிப்பள்ளம் அணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டது.
குண்டேரி பள்ளம் அணையிலிருந்து பாசனத்திற்காக இன்று முதல் 44 நாட்கள் தொடரில் 34 நாட்களுக்கு 70.502 மில்லியன் கன அடி தண்ணீர் வழங்க பட உள்ளது இடது கரை வாய்க்காலில் 16 கன அடியும்,வலது கரை வாய்க்காலில் 8 கன அடி தண்ணீரையும் நீர்வள ஆதாரத்துறை அதிகாரிகள் திறந்து வைத்தனர்.
இன்று முதல் மே மாதம் 4ம் தேதி வரை தண்ணீர் வழங்கப்படும் என்றும், விவசாயிகள் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்துவதோடு, உரிய காலத்தில் பயிர் செய்து ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
Next Story