பேச்சிப்பாறை அணையிலிருந்து தண்ணீர் திறப்பு  - கலெக்டர் அறிவிப்பு

பேச்சிப்பாறை அணையிலிருந்து தண்ணீர் திறப்பு  - கலெக்டர் அறிவிப்பு

பேச்சிப்பாறை அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்படும் என கலெக்டர் அறிவித்துருந்ததை அடுத்து மாலையில் திறக்கப்பட்டது


பேச்சிப்பாறை அணையிலிருந்து தண்ணீர் திறக்கப்படும் என கலெக்டர் அறிவித்துருந்ததை அடுத்து மாலையில் திறக்கப்பட்டது
கன்னியாகுமரி மாவட்டம் தாமிரபரணி ஆற்றுப்பகுதியான குழித்துறை, மங்காடு, வைக்கலூர் மற்றும் பரக்காணி பகுதிகளில் கடல் நீர் பரக்காணி உள்ளிட்ட ஆற்றுப்பகுதியில் உட்புகுவதால் பொதுமக்களுக்கு வழங்கப்படும் குடிநீர் உப்பு நீராகவும், விவசாய தேவைகள் பாதிக்கப்படுவதாக பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மாவட்ட நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு சென்றனர். அதன் அடிப்படையில் உப்புநீரை கடலில் சேர்க்கும் வகையில் தமிழ்நாடு அரசு பேச்சிப்பாறை அணையிலிருந்து சுமார் 1000 கனஅடி தண்ணீர் மதகுகள் வழியாக திறந்துவிட அனுமதி வழங்கியது. இதைத் தொடர்ந்து இன்று (08.04.2024) மாலை 6 மணிக்கு பேச்சிப்பாறை அணையை திறக்க கலெக்டர் ஸ்ரீதர் உத்தரவிட்டார். தண்ணீர் திறந்து விடப்படவுள்ளதால் தாமிரபரணி ஆற்றுப்பகுதிகளில் குளிப்பவர்கள் மற்றும் கரையோர பகுதி பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் கவனத்துடன் இருக்க வேண்டுமெனவும் கலெக்டர் அறிவித்துள்ளார்.

Tags

Next Story