பேச்சிப்பாறை அணையிலிருந்து பாசனத்துக்கு தண்ணீர்  திறப்பு 

பேச்சிப்பாறை அணையிலிருந்து பாசனத்துக்கு தண்ணீர்  திறப்பு 

பாசனத்திற்காக பேச்சிப்பாறை அணையிலிருந்து  தண்ணீரை கலெக்டர் திறந்து வைத்தார்.


பாசனத்திற்காக பேச்சிப்பாறை அணையிலிருந்து  தண்ணீரை கலெக்டர் திறந்து வைத்தார்.

கன்னியாகுமரி மாவட்டம் கோதையாறு மற்றும் பட்டணங்கால் பாசனத்திற்கு கன்னிப்பூ மற்றும் கும்பப்பூ சாகுபடிக்கு பேச்சிப்பாறை அணையிலிருந்து தண்ணீர் திறக்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. மாவட்ட ஆட்சித்தலைவர் பி.என்.ஸ்ரீதர் தண்ணீர் திறந்தார். தொடர்ந்து அவர் தெரிவிக்கையில்- கோதையாறு மற்றும் பட்டணங்கால் பாசன அமைப்பில் 79,000 ஏக்கர் பயன்பெறும் நிலங்களின் பாசனத்திற்கும் கன்னிப்பூ மற்றும் கும்பப்பூ சாகுபடிக்கு இன்று 01.06.2024 முதல் 28.02.2025 வரை நாளொன்றுக்கு வினாடிக்கு 850 கனஅடி வீதம் தேவைக்கேற்ப மற்றும் நீர் இருப்பு மற்றும் நீர்வரத்தினை பொறுத்து பேச்சிப்பாறை அணை, பெருஞ்சாணி அணை, சிற்றார்-1 மற்றும் சிற்றார்-11 அணைகளிலிருந்து தண்ணீர் திறந்துவிட அரசாணை பெறப்பட்டு பேச்சிப்பாறை அணையிலிருந்து திறந்துவிடப்பட்டது.

கோதையாறு வடிநில பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. மேலும் கோதையாறு மற்றும் பட்டணங்கால் ஆயக்கட்டு விவசாய பெருமக்கள் நீரினை சிக்கனமாக பயன்படுத்தி அதிக மகசூலை பெறும் நோக்கத்துடன் நீர் பங்கீட்டில் நியாயமான முறையில் துறையுடன் ஒத்துழைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு கூறினார். நிகழ்ச்சியில் நீர்வள ஆதாரத்துறை செயற்பொறியாளர் பொறி.க.ஜோதிபாசு, இணை இயக்குநர் வேளாண்மை ஆல்பர்ட் ராபின்சன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) ஜெங்கின் பிரபாகர், கோதையாறு வடிநில கோட்டம் உதவி செயற்பொறியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.

Tags

Next Story