முதல் போக பாசனத்திற்காக வைகை அணையில் தண்ணீர் திறப்பு
மதுரை திண்டுக்கல் மாவட்டங்களில் பெரியார் பிரதான கால்வாய் பாசன பகுதியில் கீழ் உள்ள இருபோக பாசன நிலங்களில் முதல் போகத்திற்கு வைகை அணையில் இருந்து முதல் போக பாசனத்திற்கு தண்ணீர் திறக்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. அந்த அரசாணையில் நேற்று முதல் 120 நாட்களில் 6 ஆயிரத்து 739 மில்லியன் கன அடி தண்ணீர் பாசனத்திற்காக திறந்து விடும்படியும், முதல் 45 நாட்களுக்கு தொடர்ச்சியாகவும், அதன் பின்னர் வரும் 75 நாட்களுக்கு முறை வைத்தும் தண்ணீர் திறக்கும்படியும் குறிப்பிடப்பட்டிருந்தது.
அதன்படி நேற்று காலை 9 மணிக்கு வைகை அணையில் இருந்து வினாடிக்கு 900 கன அடி தண்ணீர் பாசன கால்வாய் மூலம் திறந்து விடப்பட்டது. தேனி மாவட்ட ஆட்சித் தலைவர் சஜீவனா, திண்டுக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் தேனி, வைகை அணை, பாசனம், திண்டுக்கல், தேனி, மதுரை,
ங்கொடி, மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் சங்கீதா மற்றும் பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் சரவணன் ஆகியோர் தண்ணீரை திறந்து வைத்தனர்.
வைகை அணையின் ஏழு சிறிய மதகுகள் வழியாக தண்ணீர் சீறிப்பாய்ந்து வெளியேறியது. பாசனத்திற்காக திறந்து விடப்பட்ட தண்ணீரில் அதிகாரிகள் மலர் தூவினர். தற்போது வைகை அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரின் மூலம் மதுரை திண்டுக்கல் மாவட்டங்களில் உள்ள 45 ஆயிரத்து 41 ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறும். வைகை அணையில் இருந்து மதுரை வரையிலான சுமார் 70 கிலோமீட்டர் தூரம் நீளமுள்ள பாசன கால்வாய் வழியாக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் யாரும் கால்வாயில் இறங்கவோ கடக்கவோ முயற்சிக்க வேண்டாம் என்று பொதுப்பணி துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.