வேலூரில் இருந்து மிக் ஜாம் புயல் பாதிப்பு பகுதிகளுக்கு நிவாரண உதவி

வேலூரில் இருந்து மிக் ஜாம் புயல் பாதிப்பு பகுதிகளுக்கு  நிவாரண உதவி

நிவாரண பொருட்கள் அனுப்பி வைப்பு

வேலூரில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலிருந்து மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் முன்னிலையில், தன்னார்வலர்கள், செஞ்சிலுவை சங்கத்தினர் சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் தாமாக முன் வந்து அதிக அளவில் மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட சென்னை,திருவள்ளூர் ,காஞ்சிபுரம்,செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களுக்கு பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிடும் நோக்கில் ரொட்டிகள்,பன் ,பிஸ்கேட்,பால் ,மளிகை சாமான் கள்,பால்,பாய் ,போர்வைகள் கம்பளிகள்,குடிநீர்,மருந்துகள் மாத்திரைகள், மற்றும் 34 ஆயிரம் லிட்டர் ஆவின் பால் ஆகியவை மூன்று லாரிகள் மூலம், புயல் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களுக்கு உதவிடும் நோக்கில், வேலூர் ஆட்சியர் அலுவலகத்திலிருந்து பணியாளர்களுடன் அனுப்பி வைக்கப்பட்டது. தொடர்ந்து புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிடும் நோக்கில் பொருட்களை ஆட்சியர் அலுவலகத்தில் வழங்கி வருவதால் நிவாரண பொருட்கள் குவிந்து வருகிறது. அவற்றை தொடர்ந்து லாரிகள் மூலம் அனுப்பும் பணியும் நடந்து வருகிறது.

Tags

Next Story