சம்பா சாகுபடி இழப்பிற்கு நிவாரணம் - விவசாயிகள் வலியுறுத்தல்

சம்பா சாகுபடி இழப்பிற்கு நிவாரணம் - விவசாயிகள் வலியுறுத்தல்

விவசாயிகள் குறைதீர் கூட்டம் 

சம்பா சாகுபடியை இழந்த விவசாயிகளுக்கு தமிழ்நாடு அரசு நிவாரணம் வழங்க வேண்டும் விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

தஞ்சை மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் தலைமையில் விவாசயிகள் குறைதீர் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலக அரங்கில் நடந்தது.இக்கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்திய கோரிக்கைகள்: அய்யம்பேட்டை கே.எஸ். முகமது இப்ராஹிம்: சாகுபடி செய்து வரும் கிணற்றுப் பாசன விவசாயிகளுக்கு தேவையான உரங்களைக் கூட்டுறவு சங்கங்களில் இருப்பு வைக்க வேண்டும். காட்டுக்குறிச்சி பி. செந்தில்குமார்: காவிரி நீர் பற்றாக்குறை காரணமாக சம்பா சாகுபடியை இழந்துள்ள விவசாயிகளுக்கு மாற்றுப் பயிர் குறித்த ஆலோசனைகளை அரசு வழங்க வேண்டும். எந்தச் சாகுபடியும் செய்ய இயலாத விவசாயிகளின் குடும்பத்தைக் காப்பாற்ற நிவாரணம் வழங்க வேண்டும். பொன்னவராயன்கோட்டை வா.வீரசேனன்: மேட்டூர் அணை திறக்கப்பட்ட பிறகு ஏரி, குளங்களில் மண் எடுக்கக்கூடாது என உத்தரவு உள்ளது. ஆனால், பட்டுக்கோட்டை பகுதியிலுள்ள ஏரி, குளங்களில் தொடர்ந்து மண் அள்ளப்படுகிறது. இதைத் தடுக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். கே.ஆர்.புரம் சீனிவாசன்: பெருமகளூர் பெரிய ஏரியில் தற்போது தண்ணீர் இல்லாததால், சிலர் ஆக்கிரமிப்பு செய்து, விவசாய நிலமாக மாற்ற முயற்சி செய்து வருகின்றனர். இதைத் தடுத்து நிறுத்த மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இது தொடர்பாக ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்குமாறு பொதுப் பணித் துறை அலுவலர்களுக்கு ஆட்சியர் உத்தரவிட்டார். இதேபோல் மற்ற விவசாயிகள் தங்கள் கோரிக்கைகள் குறித்துப் பேசினார்.

Tags

Next Story