சேலத்திலிருந்து தூத்துக்குடிக்கு நிவாரண பொருட்கள்

சேலத்திலிருந்து தூத்துக்குடிக்கு நிவாரண பொருட்கள்

நிவாரண பொருட்கள் அனுப்பி வைப்பு 

தென் மாவட்டங்களான, திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த இரண்டு நாட்களாக பெய்த கனமழையின் காரணமாக ஏராளமான மக்கள் தங்கள் இருப்பிடத்தை இழந்தும், உணவு கிடைக்காமலும் அவதிப்பட்டு வருகிறார்கள். அந்த மக்களுக்கு உதவிடும் வகையில் சேலம் மாவட்ட நிர்வாகம் சார்பில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தூத்துக்குடி மக்களுக்கு லாரி மூலம் நிவாரண பொருட்கள் அனுப்பும் பணி நடந்தது.‌ தொங்கும் பூங்கா அரங்கத்தில் இருந்து நிவாரண பொருட்கள் ஏற்றிச் சென்ற லாரியை சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகம், மாநகராட்சி ஆணையாளர் பாலசந்தர் ஆகியோர் அனுப்பி வைத்தனர்.

Tags

Next Story