வணிகா் சங்க பேரமைப்பு சார்பில் நிவாரண பொருட்கள்
கடும் மழையால் பாதிக்கப்பட்ட தென் மாவட்ட மக்களுக்கான நிவாரண பொருட்கள் சேகரிக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. வணிகர் சங்கங்கள் மூலம் சேகரிக்கப்பட்ட நிவாரண பொருட்கள் மாவட்ட நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டன. இதனை அடுத்து பேரமைப்பின் மாநில தலைவர் விக்கிரமராஜா அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க முதல் கட்டமாக நாமக்கல் மாவட்டத்தில் சேகரிக்கப்பட்ட பால், பிரட், பிஸ்கெட், அரிசி, கோதுமை, வேஷ்டி, சேலை உள்ளிட்ட நிவாரண பொருட்கள் திருநெல்வேலி மாவட்ட பேரமைப்பிற்கு நேற்று முன்தினம் (21/12/2023) இரவு அனுப்பி வைக்கப்பட்டது. இதனை தொடர்ந்து நேற்று (22/12/2023) மதியம் நாமக்கல் நகர தினசரி மார்க்கெட் காய்கறி வியாபாரிகள் சங்கத்தின் சார்பில் தக்காளி, உருளைகிழங்கு, கத்தரிக்காய், முட்டைகோஸ், புடலங்காய், வெண்டைக்காய் உள்ளிட்ட காய்கறிகள் அனுப்பி வைக்கப்பட்டன.
வாகனத்தை வழியனுப்பும் நிகழ்வில் நாமக்கல் மாவட்ட தலைவர் ஜெயகுமார் வெள்ளையன், நாமக்கல் நகர தினசரி மார்க்கெட் காய்கறி வியாபாரிகள் சங்கத்தின் தலைவர் மனோகரன், செயலாளர் சிவக்குமார், துணை செயலாளர்கள் விஜயகுமார், புண்ணியம், பேரமைப்பு பொருளாளர் SK சீனிவாசன், இணை செயலாளர் தேவி உதயக்குமார், ஒருங்கிணைப்பாளர் சேந்தை கோபாலகிருஷ்ணன், இளைஞர் அணி மாவட்ட செயலாளர் ராயல் பத்மநாபன், இணை அமைப்பாளர் எவரெஸ்ட் ராஜா, ரிஸ்வான், சேந்தமங்கலம் அரிமா சங்க நிர்வாகிகள் விமல், செல்வதுரை, பாலசுப்பிரமணியம் ஆகியோர் கலந்து கொண்டனர்.