ஈரோடு மாவட்ட நிா்வாகம் சாா்பில் சென்னைக்கு நிவாரண பொருட்கள்
ஈரோடு மாவட்ட நிா்வாகம் சாா்பில் சென்னைக்கு நிவாரண பொருட்கள் அடங்கிய வாகனங்கள் அனுப்பி வைக்கப்பட்டது
ஈரோடு மாவட்ட நிா்வாகம் சாா்பில் சென்னைக்கு நிவாரண பொருட்கள் அடங்கிய வாகனங்கள் அனுப்பி வைக்கப்பட்டது
ஈரோடு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் ராஜ கோபால் சுன்கரா வழிகாட்டுதலின்படி, மாவட்ட நிர்வாகம் மற்றும் தொண்டு நிறுவனங்கள் சார்பில் மிக்ஜாம் புயலினால் பாதிக்கப்பட்டுள்ள சென்னை பொதுமக்களுக்கு 10 வது கட்டமாக அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய வாகனங்கள் அனுப்பி வைக்கப்பட்டது. மாவட்ட ஆட்சித்தலைவர் ராஜகோபால் சுன்கரா மிக்ஜாம் புயலினால் பாதிக்கப்பட்டுள்ள சென்னை மாவட்ட பொதுமக்களுக்கு, இதுவரை ஈரோடு மாவட்ட நிர்வாகம் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சார்பில் மில்கா பிரட் பாக்கெட்கள், குடிநீர் பாட்டில்கள், பிஸ்கட் பாக்கெட்கள், போர்வைகள், அரசி, கோதுமை மாவு, ஆயில், பால் பவுடர், மசாலா பொருட்கள், நூடுல்ஸ், மெழுகுவர்த்தி, தீப்பெட்டி, குளியல் சோப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை 7 கட்டங்களாக அனுப்பி வைத்துள்ளார்கள். அதனைத் தொடர்ந்து எட்டு, ஒன்பது மற்றும் பத்தாம் கட்டமாக கட்டமாக 3000 குடிநீர் பாட்டில்கள், 6476 பால் பாக்கெட்கள், 200 துண்டுகள், 300 போர்வைகள், 150 லுங்கிகள், 5000 கிலோ அரிசி மற்றும் 5000 கிலோ பால் பவுடர் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய வாகனகங்கள் அனுப்பி வைக்கப்பட்டது.
Next Story