பெரியார் பல்கலைக்கழகம் சார்பில் சென்னைக்கு நிவாரண பொருட்கள்

பெரியார் பல்கலைக்கழகம் சார்பில் சென்னைக்கு நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டது
சென்னையில் கடந்த ஒரு வாரமாக பொதுமக்கள் மிக்ஜாம் புயலின் காரணமாக மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் புயலால் பாதிக்கப்பட்ட சென்னை மக்களுக்கு நலத்திட்டங்கள் வழங்க தமிழ்நாடு அரசால் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. அதன்படி சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் ஜெகநாதன் தலைமையில் நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டது. இதில் குளிர் பானங்கள், குடிநீர் பாட்டில்கள் மற்றும் ரொட்டி உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கொடுக்கப்பட்டு சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதில் முதல் கட்டமாக 20ஆயிரம் மதிப்பிலான பொருட்கள் அனுப்பும் பணியினை பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தர் இரா.ஜெகநாதன் தொடங்கி வைத்தது குறிப்பிடத்தக்கது ஆகும். இந்நிகழ்வில் பதிவாளர் தங்கவேல், புல முதன்மையர் ஜெயராமன், பல்கலைக்கழக நூலகர் மற்றும் மக்கள் தொடர்பு அலுவலர் ஜெயபிரகாஷ் ஆகியோர் உடன் இருந்தனர்.

Tags

Next Story