திருவண்ணாமலை மாவட்டத்திலிருந்து வெள்ள நிவாரண பொருட்கள் அனுப்பிவைப்பு

திருவண்ணாமலை மாவட்டத்திலிருந்து வெள்ள நிவாரண பொருட்கள் அனுப்பிவைப்பு

நிவாரண பொருட்கள் வழங்கிய அலுவலர்கள் 

புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அத்தியாவசிய பொருட்களை அனுப்பி வைத்த கலெக்டர் முருகேஷ்

மிக்ஜம் புயல் காரணமாக கடந்த இரண்டு நாட்களாக கண மழை வெள்ளத்தினால் சென்னை முழுவதும் தத்தளித்து வந்த நிலையில் மிகவும் தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்து பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். மிக்ஜாம் புயலில் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது சென்னை மாநகரம்.

அதிலும், சென்னையின் புறநகர் பகுதிகளில் இன்னும் தண்ணீர் வடியவேயில்லை. மிக்ஜம் புயல் ஆந்திர மாநிலத்தை நோக்கி நகர்ந்து சென்ற நிலையில் கனமழை படிப்படியாக தற்போது குறைய தொடங்கியது. இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்டத்தில் இருந்து சென்னையில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்காக திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக வளாகத்தில், மாவட்ட நிர்வாகம் மற்றும் திருவண்ணாமலை தாலுக்கா அனைத்து வியாபரிகள் சங்கம் இணைந்து மிக்ஜாம் புயல் பாதிப்பினால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு ரூ. 5 இலட்சம் மதிப்பில் உணவு பொருட்கள் மற்றும் அத்தியாவசிய பொருட்களை சென்னைக்கு ஏற்றிச்செல்லும் வாகனத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் முருகேஷ், கொடியசைத்து அனுப்பிவைத்தார்.

இந்நிகழ்வின் போது உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் ராமகிருஷ்ணன் ,திருவண்ணாமலை தாலுக்கா வியாபாரிகள் சங்கப் பிரதிநிதிகள் ,அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர். காஞ்சிபுரத்துக்கு வெள்ள நிவாரணப் பொருள்கள்மிக்ஜம் புயலால் பாதிக்கப்பட்ட காஞ்சிபுரம் மாவட்ட மக்களுக்கு உதவுவதற்காக, ஆரணியில் பெறப்பட்ட நிவாரணப் பொருள்கள் புதன்கிழமை அனுப்பிவைக்கப்பட்டன.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி வட்டாரத்தில் பெறப்பட்ட நிவாரணப் பொருள்களை வருவாய்க் கோட்டாட்சியா் தனலட்சுமி தலைமையில் காஞ்சிபுரம் மாவட்ட மக்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் வட்டாட்சியா் மஞ்சுளா, மண்டல துணை வட்டாட்சியா் தட்சிணாமூா்த்தி, வட்ட வழங்கல் அலுவலா் வெங்கடேசன், தாலுக்கா வியாபாரிகள் சங்கப் பிரதிநிதிகள் ,அரசு அலுவலர்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

Next Story