50 லட்சம் மதிப்பிலான நிவாரண பொருட்கள் அனுப்பி வைப்பு!

50 லட்சம் மதிப்பிலான நிவாரண பொருட்கள் அனுப்பி வைப்பு!

நிவாரண பொருட்கள் அனுப்பி வைப்பு!

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தனியார் அமைப்பின் மூலம் ஒரு கோடி 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான நிவாரண பொருட்கள் அனுப்பிவைப்பு.
தென் மாவட்டங்களில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு திருமங்கலத்தில் உள்ள தனியார் அமைப்பின் மூலம் ஒரு கோடி 50 லட்சம் மதிப்பிலான நிவாரண பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டது. 70க்கும் மேற்பட்ட வாகனங்களில் நிவாரண பொருட்கள் எடுத்துச் செல்லப்பட்டது. கடந்த வாரம் தென் மாவட்டங்களான தூத்துக்குடி, நெல்லை,தென்காசி,கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் பெய்த அதிகன மழையால் வெள்ளம் சூழ்ந்து பெரும்பாலான மக்கள் பாதிக்கப்பட்டனர். குறிப்பாக தூத்துக்குடி,நெல்லை மாவட்டங்களில் வெள்ள பாதிப்பு அதிகம் இருந்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசின் சார்பிலும் தனியார் தொண்டு நிறுவனங்கள் சார்பிலும் நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் உள்ள போகோ சேரிடபிள் டிரஸ்ட் அமைப்பு பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்குவதற்கான ஏற்பாடுகளை செய்து வந்தது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு பாய் போர்வை, பெண்களுக்கான நைட்டி,குழந்தைகளுக்கான நாப்கின், மெழுகுவர்த்தி குழந்தைகளுக்கான நாப்கின், பிஸ்கட் உணவு தண்ணீர் பாட்டில்கள் என ரூபாய் ஒரு கோடி 50 லட்சம் மதிப்பிலான நிவாரண பொருட்களை ஏற்பாடு செய்து 70க்கும் மேற்பட்ட வாகனங்களில் அனுப்பி வைக்கப்பட்டு போகோசேரி டபிள் டிரஸ்ட் சேர்மன் விஜயராகவன் தலைமையில் நிர்வாகிகள் மற்றும் 100க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் மூலம் தூத்துக்குடி மற்றும் நெல்லை மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நேரடியாக சென்று வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது இந்த அமைப்பின் மூலம் ஏற்கனவே 45 லட்ச ரூபாய் மதிப்பிலான நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story