ஆலந்துார் தொகுதியில் நிவாரணம்
ஆலந்துார் தொகுதியில் நிவாரணம்
சென்னை மாநகராட்சியின் ஆலந்துார் மண்டலம், அடையாறு ஆற்றங்கரையோரம், கண்டோன்மென்ட் பகுதியில் ஏராளமானோர் மிக்ஜாம் புயல் மழையால் பாதிக்கப்பட்டனர். அவர்களுள் பலர் பாதுகாப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். தினமும் மூன்று வேளை என 17 ஆயிரம் பேருக்கு மூன்று நாட்கள் உணவு தயாரித்து வழங்கப்பட்டது. இந்நிலையில் பாதிக்கப்பட்ட அம்பேத்கர் நகர் தண்டுமாநகர், நசரத்புரம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 4,500 குடும்பங்களுக்கு சமையல் பொருட்கள், பாய், பெட்ஷீட் உள்ளிட்ட நிவாரணப் பொருட்களை தொகுதி எம்.எல்.ஏ., வும், சிறு குறு மற்றும் நடுத்தர தொழில்கள் துறை அமைச்சருமான அன்பரசன் வழங்கினார்.
Next Story